குடியரசுத் தலைவர் செயலகம்

உலக உணவு இந்தியா – 2017 நிறைவு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இந்தப் பெருவிழா இந்தியாவில் உணவுத் தொழில் துறையில் உள்ள மிகப்பரந்த. எல்லையற்ற வாய்ப்புகளை காட்சிப்படுத்துவதாக உள்ளது என்றார்

Posted On: 05 NOV 2017 2:36PM by PIB Chennai

இந்திய அரசின் உணவு பதனத் தொழில்கள் அமைச்சகம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த உலக உணவு இந்தியா – 2017 நிறைவு விழாவில் இன்று (நவம்பர் 5, 2017) இந்தியக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந் உரையாற்றினார்.

இந்த விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் உலக உணவு இந்தியா- 2017 – அதிகம் பேசப்படுவதாகவும், உண்மையான வரலாற்று வெற்றியாகவும் அமைந்ததற்கு அதன் ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். இந்தப் பெருநிகழ்வில் 60 நாடுகளிலிருந்து பிரதிநிதிகளும் 60 உலக நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்றிருப்பதை அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் உணவு மற்றும் உணவு பதனத் தொழில்களில் உள்ள மிகப்பரந்த, எல்லையற்ற வாய்ப்புகளை வெளிப்படுத்த இது உதவியுள்ளது. இந்திய உணவின் கும்பமேளாவாகவும் இது விளங்குகிறது.

உணவு என்பது பண்பாடு என்ற குடியரசுத் தலைவர் உணவு என்பது வணிகமும் கூட என்றார். இந்தியாவின் உணவு நுகர்வு மதிப்பு தற்போது 370 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. பத்தாண்டுகளுக்கும் குறைவான காலத்தில் 2025 – ஆம் ஆண்டுக்குள் இது ஒரு டிரில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறுவடைக்குப் பிந்தைய பணிகள், பொருள் போக்குவரத்து, குளிர்பதனத் தொடர்கள், உற்பத்தி உட்பட இந்தியாவின் உணவு மதிப்புத் தொடர் வர்த்தகம் இந்தியா மூழுவதும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்தத் துறை பரந்துபட்ட வணிகத் தேவையைக் கொண்டுள்ளது. உணவுத் தொழிலில் பெருமளவில் தொழில் முனைவோரை உருவாக்க முடியும். பெரும் எண்ணிக்கையில் இனையோர் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாட்டுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். உணவுத்துறையில் பெண்களும் அதிகமாக ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஊரகப் பகுதிகளில், சிறிய உணவு பதன அலகுகளை நிறுவுவதன் மூலம் குறுந்தொழில் முனைவோராகப் பெண்கள் உருவாகப் பெரும் வாய்ப்பு உள்ளது.

வளமாக உணவுத் தொழிலின் சமூக, பொருளாதாரப் பயன்களை அடைவதில் இந்திய அரசு கவனமாக உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு இது ஒரு முக்கியமான துறையாகும். உணவு உற்பத்தியை விரிவாக்க நாட்டின்  அனைத்துப் பகுதிகளிலும் 41 பெரிய உணவுப் பூங்காக்களும் குளிர்சாதன அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன. உணவுப் பாதுகாப்பு, துல்லியமான லேபலிங், அறிவு சார் சொத்துரிமை பிரச்சினைகள், உணவு பதனத் துறையில் புதிய கண்பிடிப்பு, அதே போல் தொழில் நுட்பம் பயன்பாடு போன்றவற்றில் செலுத்தப்படும் கவனம் அதிகரித்துள்ளது.

ஸ்டார்ட் – அப் விருதுகள், ஹாக்கத்தான் விருதுகள் பெற்றவர்களை குடியரசுத் தலைவர் பாராட்டினார். இவை, இந்தியாவின் உணவு பதனத் துறையின் நன்கு வடிவமைக்கும் தரத்தையும் பாதுகாப்புத் தரங்களையும் உயர்த்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். நோபல் பரிசு வென்ற இந்தியாவின் விஞ்ஞானி டாக்டர் சி.வி. ராமன் கண்டுபிடிப்பான வண்ணப்ட்டை ஆய்வுக் கருவியியலை பயன்படுத்த குறைந்த செலவில் கையடக்கமான கருவியை உருவாக்கியவர் ஸ்டார்ட் – அப் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒருவர். இந்தக் கருவியைக் கொண்டு உணவுக் கலப்படத்தைத் துரிதமாகக் கண்டறிய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் தொழில்நுட்பம் உணவு மோசடியிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.

இந்திய விவசாயிகளும் இந்திய உணவு பதனத் தொழில்துறையும் இந்தியாவுக்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் அதேபோல் இந்தியாவின் போட்டி விலை கட்டமைப்பை மூலம் உலகத்திற்கும் வழங்கும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். இது விவசாயிகளையும் நுகர்வோரையும் விலைவாசி அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும். எதிர்காலத்தில் விவசாய சமூகத்திற்குக் கட்டுபடியாகும் வருவாயை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.



(Release ID: 1510416) Visitor Counter : 179


Read this release in: English