மத்திய அமைச்சரவை

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர பயன்களைப் பெறும் வகையில் இந்தியா மற்றும் பெலாரஸ் இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 NOV 2017 3:51PM by PIB Chennai

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர பயன்களைப் பெறும் வகையில் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (ஐ.என்.எஸ்.ஏ.) மற்றும் பெலாரசின் தேசிய அறிவியல் அகாடமி ஆகியவற்றுக்கு இடையே உடன்படிக்கை செய்து கொள்வது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விளக்கப்பட்டது.

இந்த உடன்படிக்கை கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி பெலாரஸ் அதிபர் மேதகு திரு. அலெக்சாண்டர் லுகாஷென்கோ விஜயத்தின் போது பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இந்தியா மற்றும் பெலாரசின் தொழில்நுட்பங்களை அடையாளம் காண்பது, மதிப்பிடுவது, உருவாக்குவது மற்றும் உலகளாவிய அளவில் வர்த்தகமயமாக்குவது இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும். இது இருநாடுகளிலும் உள்ள நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் இருநாட்டுக்கும் பரிவர்த்தனைகள் மற்றும் கூட்டு பயிலரங்குகளுக்கு ஆதரவு அளிப்பதுடன் அறிவியல் மற்றும் பொருளாதார பயன்களை அளிக்கும்.

***



(Release ID: 1509911) Visitor Counter : 106


Read this release in: English , Gujarati