குடியரசுத் தலைவர் செயலகம்

நமது ஜனநாயக அரசியலில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதே உங்களது தலையாய கடமை, ஐபிஎஸ் பயிற்சி அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை

Posted On: 13 NOV 2017 1:34PM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்றும் வரும் 2016ஆம் ஆண்டை சேர்ந்த இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அலுவலர்கள் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்தை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.

     இந்த பயிற்சி அலுவலர்களிடம் பேசிய குடியரசுத் தலைவர், நமது நாட்டின் நிர்வாக அமைப்பின் தூண்களில் ஒன்று இந்தியா காவல் பணி என்று கூறினார். அகில இந்திய பணியில் உறுப்பினராக இருப்பதால் இவர்கள் தனி தனி மாநிலங்களில் பணியாற்றுவார்கள் ஆனால் வர்கள் தேசிய கொள்கையை பிரதிபலிப்பவர்கள்.

இந்த வகையில் பார்க்கும் போது, பொது மக்களின் ஒழுங்கு மற்றும் நேர்மையான நடத்தைக்கு மட்டும் அல்ல சட்டத்தின் மகத்துவத்திற்கும் இவர்கள் காவலர்கள். அலுவலர்கள், பயம் அல்லது தயக்கம் இல்லாமல் கால தாமதமின்றி தங்களின் கடமைகளை மேற்கொள்ளுமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

திறம்வாய்ந்த அரசு ஊழியர்களான இவர்கள் இந்த பயமும் இன்றி அரசு நிர்வாகிகளுக்கு நேர்மையான மற்றும் நடுநிலையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கூறினார். அரசியலமைப்பு சட்டமே இவர்களின் புனித நூலாகவும் அவர்களின் நிலையான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

 

தொழில்நுட்பம் காவல் கண்காணிப்பின் சவாலாகவும் இருக்கும் ஆயுதமாகும் இருக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இது குற்றங்களுக்கு வழிவகுக்கும் அதே சமயத்தில் தொழில்நுட்பம் காவலர்கள் அதிக திறனுடன் தங்களின் கடமையை புரியவும் பயன் படுகிறது.  பொது மக்கள் காவல் துறையினருடன் தொடர்பு கொள்ளவும், ஏன் தங்களின் வீட்டில் இருந்து கணினி அல்லது கைபெசி மூலம் புகார் அளிக்கவும் பயன்படுகிறது. இந்த முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று பயிற்சி அலுவலர்களை கேட்டுக்கொண்டார். காவல் நிலையத்திற்கு நேரில் வராமலே அதன் சேவைகளை பொது மக்கள் பெறுவதுதான் சிறந்த காவல் அமைப்பு என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

 

***



(Release ID: 1509445) Visitor Counter : 132


Read this release in: English