எரிசக்தி அமைச்சகம்

அரசின் பெருமைக்குரிய ஜம்மு – காஷ்மீர், லேக்-லடாக் பகுதி மின் விநியோகத் திட்டத்தை பவர்கிரிட் நிறுவனம் நிறைவு செய்தது

இந்தியாவில் முதன்முதலாக 11,500 அடி உயரத்தில் 220 கிலோவாட் திறனுள்ள துணை மின் நிலையம் நிறுவப்பட்டது.

Posted On: 02 NOV 2017 4:31PM by PIB Chennai

பவர்கிரிட் நிறுவனம் அக்டோபர் 31, 2017 அன்று மின் விநியோகத்திற்கு லேக்கால்ஸ்டி பகுதியில் 220 kV S/c ,  ஶ்ரீநகர் ஆல்ஸ்டெங்லேக் மின் பகிர்மானத்திற்கு 220 kV S/c,  அத்துடன் லேக்கால்ஸ்டி பகுதியில் 220/66 kV GISc  - ஶ்ரீநகர் ஆல்ஸ்டெங்லேக் மின் பகிர்மானம்,அமைத்து பணியை நிறைவு செய்தது. நம் நாட்டில் முதன்முறையாக 220 கிலோவாட் துணை மின் நிலையம், 11,500 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் லேக்லடாக் பகுதி, பூகோள ரீதியில் இடர் நிறைந்தது. இந்த பகுதியில் மின் பகிர்வை நீட்டிக்கும் வகையில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது அரசுக்கு பெருமை சேர்க்கும் திட்டமாகும். இந்த முக்கிய திட்டத்திற்கு ஆகஸ்ட் 14 (12.08.2014) அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஶ்ரீநகர்லேக் மின் பகிர்மான அமைப்பை பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்  (பவர்கிரிட் - POWERGRID). எனப்படும் பொதுத்துறை நிறுவனம் மேற்கொண்டது.

இந்தத் திட்டத்திற்கு, லேக்/லடாக் பகுதியில் உள்ள நிம்மோ பாஸ்கோ ஹைட்ரோ மின்சார நிலையத்தில் இருந்து மின்சாரம் பகிர்மானம் செய்யப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னமும் மீதமுள்ள கால்ஸ்டிகார்கில்டிராஸ்ஆல்ஸ்டெங் (ஶ்ரீநகர்) பகுதி திட்டம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தத் திட்டத்தில் லடாக் பகுதிக்கு நேரடியாக வடக்கு பகிர்மானத்தில் இருந்து அனைத்து காலங்களிலும் மின்சாரம் போதுமான அளவு கிடைக்கும்.

 


(Release ID: 1508667) Visitor Counter : 72


Read this release in: English