பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

பாதிக்கபடகூடிய பாலின குறியீடு குறித்த அறிக்கை – மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம்

Posted On: 06 NOV 2017 6:59PM by PIB Chennai

குழந்தைகள் நலத்துறையில் செயல்படும் பிளான் இந்தியா என்ற அரசு சாரா அமைப்பு நவம்பர் 01, 2017 அன்று புது தில்லியில் உள்ள இந்தியா ஹபிதட் மையத்தில் ‘பிளான் பார் எவ்ரி சைல்ட் – லீவ் நோ கேர்ள் சைல்ட் பிஹைன்ட் என்ற நிகழ்சியை நடத்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஆதரவு அளிக்ககோரி அனுகியது. இதற்கு அமைச்சகம் அதன் இலச்சினையை பயன்படுத்த ஒப்புதல் அளித்தது.

இந்த நிகழ்ச்சியின் போது,  பிளான் இந்தியா பாலின குறியீடு குறித்த அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையை பிளான் இந்தியா அமைப்பு மட்டுமே தயாரித்துள்ளதாகவும், இந்த அறிக்கைக்கும் அமைச்சகத்திற்கும் எந்தவிதமான சமந்தமும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால்,  மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்  நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த அறிக்கைக்கும் அமைச்சகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சில நாளிதழ்களில் குறிபிட்டுள்ளது போல், நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட அறிக்கையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிடவில்லை.

 


(Release ID: 1508635) Visitor Counter : 67


Read this release in: English