குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

வாழ்கை முறை சார்ந்த நோய்களுக்கு பலியாகதிர்கள்; குடியரசு துணை தலைவர்

மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்

Posted On: 05 NOV 2017 12:17PM by PIB Chennai

நவீன மற்றும் சரீர உழைப்பில்லாத வாழ்கை முறை சார்ந்த நோய்களுக்கு பலியாககாமல் விழிப்புணர்வுடன் இருங்கள் என்று குடியரசு துணை தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஆந்திரா பிரதேச விஜயவாடாவில் உள்ள ஸ்வர்ண பாரத் அறகட்டளையில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து குடியரசு துணை தலைவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். ஆந்திரா பிரதேச சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வித் துறை அமைச்சர் டாக்டர் கமினேனி ஸ்ரீநிவாஸ், ஆந்திரா பிரதேச நீர் வளங்கள் மேலாண்மை துறை அமைச்சர் திரு. தேவினேனி உமா மகேஷ்வர ராவ் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உடல் உழைப்பின்மை மற்றும் நவீன உணவு பழக்கங்கள் வாழ்கை முறை சார்ந்த நோய்களை உருவாக்குகின்றன என்று குடியரசு துணை தலைவர்  கவலை தெரிவித்தார். ஆரோகியமான வாழ்க்கைக்கு மக்கள் நடைபயிற்சி,  சீராக ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், யோகா பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

நவீன வாழ்கை முறை சார்ந்த நோய்களின் அபாயம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ சமூகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊரக பகுதிகளில், போதுமான அளவு சுகாதார உள்கட்டமைப்பு இல்லை என்று கவலை தெரிவித்த அவர், வளர்ந்து வரும் சுகாதார தேவைகளுக்கு அரசின் நடவடிக்கைகள் மட்டும் போதாது. தனியார் துறைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார். ஊரக மற்றும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில், மத்திய மற்றும் மாநில அரசுகள்  சுகாதார துறையின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.


சில அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டால், மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். உலக சுகாதார அமைப்பின்  விதிகள் படி ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்பது விகிதம் ஆகும். இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். நாட்டில் மருத்துவ பற்றாக்குறையாக உள்ள இந்த சூழலை மாற்ற, திட்ட குழுவின் (நிதி ஆயோக்) உயர் மட்ட குழு 2022-ஆம் ஆண்டுக்குள் மேலும் 187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

மருத்துவ முகாமை பார்வையிட்ட குடியரசு துணை தலைவர் சிகிச்சை பெரும் நோயாளிகளுடன் கலந்துரையாடினார்.

*****



(Release ID: 1508454) Visitor Counter : 164


Read this release in: English