எரிசக்தி அமைச்சகம்

மின்சாரத் துறை

Posted On: 13 OCT 2017 4:25PM by PIB Chennai

தீன் தயாள் உபாத்யாயா கிராம மின்வசதித் திட்டம்:

 

  • 2015 ஜூலை 25 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • கிராமப்புற ஏழைகளுக்கு மின்வசதி கிடைப்பதை உறுதிப்படுத்த ரூ. 500 கோடி முதல் கட்ட ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • தொடக்கத்தில் 2,800 கிராமங்கள் இலக்காக இருந்தன. ஒரே ஆண்டில் 7,108 கிராமங்களுக்கு மின்வசதி வழங்கப்பட்டது.
  • 2017 மே மாதம் வரையில் 18,452 கிராமங்களுக்கு மின்வசதி செய்து தருவது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2017 ஏப்ரல் 28 அன்று இலக்காக இருந்த 18,452 கிராமங்களில் 13,328 கிராமங்களுக்கு மின்வசதி செய்து தரப்பட்டுள்ளது.

 

கர்வ் – கைபேசி செயலி – இது கிராமப்புற மின்வசதித் திட்டத்தின் முன்னேற்றத்தை அப்போதைக்கப்போது உடனடியாகவும், வெளிப்படையாகவும் சோதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செயலி ஆகும்.

 

உஜாலா (அனைவருக்கும் எல்இடி விளக்குகளை வாங்கக் கூடிய விலையில் வழங்குவதற்கான உன்னத மின்சார திட்டம்)

  • அனைவருக்கும் எல்இடி விளக்குகளை வாங்கக் கூடிய விலையில் வழங்குவதற்கான உன்னத மின்சார திட்டம். வீடுகளில் சிறப்பான வகையில் செயல்படும் விளக்கு திட்டத்தின் கீழ் 2015 ஜனவரி 5 அன்று  தில்லியில் எல் இ டி விளக்குகள் விநியோகம் தொடங்கப்பட்டது.
  • இதுவரையில் 23.13 கோடி எல் இ டி விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
  • ஆண்டுக்கு இதன் மூலம் 30,040 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
  • ஆண்டுக்கு ரூ. 12,016 கோடி அரசுக்கு சேமிப்பு.
  • ஆண்டுக்கு 24.33 மெட்ரிக் டன்கள் கரியமில வாய் வெளியேற்றம் குறைகிறது.
  • எல் இ டி விளக்குகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமானதன் விளைவாக இந்த விளக்குகளின் கொள்முதல் விலை ரூ. 310 (ஜனவரி 2104) யிலிருந்து ரூ. 38 (ஜனவரி 2017) ஆக குறைந்துள்ளது.

 

உதய் – மின்சார விநியோக உறுதித் திட்டம் 2015 நவம்பர் 20 அன்று தொடங்கப்பட்டது.

  • அரசுக்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலைமைகளை மாற்றியமைக்க உருவாக்கப்பட்ட திட்டம். இதுவரை 27 மாநிலங்களும் துணை நிலை மாநிலங்களும் இந்த உதய் திட்டத்தில்  இணைந்துள்ளன.
  • செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் மின்சார விநியோக நிறுவனங்களுக்குப் புத்துயிர் ஊட்ட இதுவரை செய்யப்பட்டதிலேயே மிகவும் முழுமையான மின்சாரத் துறை சீர்திருத்தமாக இத்திட்டம் அமைகிறது.
  • வெளிப்படையான கண்காணிப்பு ஏற்பாடாக உதய் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்பாட்டு அறிகுறிகள் ( 2017 ஏப்ரல் 28 நிலவரப்படி)

  • மின்வசதி பெறுதல்  இதுவரை மின்வசதி தொடர்பு பெறாத குடும்பங்களில் 83 % குடும்பங்களுக்கு மின்வசதி.
  • மின்வழங்கலுக்கான அளவீட்டுமானிகள்: நகர்ப்புறப் பகுதிகளில் 100 சதவீதமும் கிராமப்புறப் பகுதிகளில் 99 சதவீதமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • கிராமப்புற மின்வழங்கல் தணிக்கை: 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மின்வழங்கல் வகைபிரிப்பு ஏற்பாடுகள்: 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • மின் கடத்திகள் மூலமான இழப்புகள்: 18 மாநிலங்களில் 22.86 சதவீதம்.
  • கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டவை: (16 மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி) ரூ. 2,32,500/- (85.39%)
  • கட்டண சீரமைப்பு: 27 மாநிலங்கள், துணை நிலை மாநிலங்களில் 25-இல் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • உற்பத்திச் செலவுக்கும் மின் கட்டணத்திற்குமான இடைவெளி: ஒரு யூனிட்டிற்கு ரூ. 0.48.
  • உஜாலா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ள எல் இ டி விளக்குகள் – 90%

 

நிலக்கரி

  • 2015ஆம் ஆண்டின் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் 31 நிலக்கரி தொகுப்புகளுக்கான வெளிப்படையான இணையம் மூலமான ஏலம் மற்றும் 51 நிலக்கரி தொகுப்புகளுக்கான ஒதுக்கீடு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
  • சுரங்கம் செயல்படும் காலம்/குத்தகை காலத்தின்போது நிலக்கரியை கொண்டுள்ள மாநிலங்களுக்கு கிடைக்கக் கூடிய  வருமானம் ரூ. 3.94 லட்சம் கோடியாகும்.
  • 2013-14 காலப்பகுதியில் கூடுதலான நிலக்கரி உற்பத்தி 462 மில்லியன் டன்களை ஒப்பிடும்போது 2016-17 காலப்பகுதியில் 554 மில்லியன் டன்கள் உற்பத்தி ஆனது.
  • (2014-17 என்ற) மூன்றே ஆண்டுகளில் இந்த 92 மில்லியன் டன்கள் உற்பத்தி உயர்வு எனில் இதே அளவிலான உயர்வை எட்டுவதற்கு 2013-14க்கு முன்பாக 7 ஆண்டுகள் ஆயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.
  • 2014ஆம் ஆண்டில் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்டு செயல்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் 7 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலுமே உபரி கையிருப்பு உள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு

மானியத்தை கைவிடும் கோரிக்கைக்கான இயக்கம்

  • 2015 மார்ச் 27 அன்று தொடங்கப்பட்டது.
  • (2017 மே 1 நிலவரப்படி) சுமார் 1.04 கோடி நுகர்வாளர்கள் தாங்கள் பெற்று வந்த மானியத்தை கைவிட்டுள்ளனர்.
  • ‘திருப்பித் தருவது’ – வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ள குடும்பங்களுக்கு இதுவரை 65 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

உர்ஜ கங்கா திட்டம்

  • ஐந்து மாநிலங்களில் உள்ள 40 மாவட்டங்கள், 2600 கிராமங்களின் மின்சாரத் தேவைகளை நிறைவேற்றுவதாக இத்திட்டம் அமைந்துள்ளது.
  • மூன்று பெரிய உரத் தொழிற்சாலைகளை மீட்டெடுக்கவும், 20க்கும் மேற்பட்ட நகரங்களை தொழில்மயமாக்கவும், 7 பெரு நகரங்களில் நகர எரிவாயு வலைப்பின்னலை வளர்த்தெடுக்கவும் இதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இத்திட்டம் உதவும்.


(Release ID: 1506005) Visitor Counter : 226


Read this release in: English