வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மையான இந்தியா – பசுமையான இந்தியா

प्रविष्टि तिथि: 13 OCT 2017 4:16PM by PIB Chennai

தூய்மையான இந்தியா திட்டம் ( நகர மேம்பாடு, கிராம மேம்பாட்டு துறைகள்)

  • இந்தியாவில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டவற்றிலேயே மிகப் பெரிய தூய்மைக்கான இயக்கம் 2014 அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று புதுதில்லி ராஜ்காட்டில் பிரதமரால் தொடங்கப்பட்டது.
  • தூய்மையை பரப்புவதற்கென நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 100 மணி நேரத்தை, அதாவது வாரத்திற்கு 2 மணி நேரத்தை ஒதுக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினமான 2019 அக்டோபர் 2ஆம் தேதிக்குள் தூய்மையான இந்தியா என்ற இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டதே இந்தப் பிரச்சாரம் ஆகும்.
  • 3 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டன.
  • சுற்றுப்புற சுகாதாரம் பெற்ற பகுதிகள் இதற்கு முன்பு 42 சதவீதமாக இருந்தது  தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • பொது இடங்களில் காலைக் கடன்களை கழிக்கும் பழக்கம் முற்றிலுமாக அகற்றப்பட்ட மாநிலங்கள் : சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், கேரளா.
  • ஆந்திரப் பிரதேசம், குஜராத், சிக்கிம் ஆகியவற்றின் நகர்ப்புறப் பகுதிகள் பொது இடங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் முற்றிலும் அகற்றப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

தூய்மையான கிராமப்புற இந்தியா

 

  • இந்த இயக்கம் துவங்கியதிலிருந்து இதுவரை 3.6 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உள்ளே அமைந்த கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • 3 மாநிலங்கள், 118 மாவட்டங்கள், 1,74,557 கிராமங்கள் பொது இடங்களில் காலைக் கடன்களை கழிக்கும் பழக்கம் முற்றிலும் அகற்றப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • தனிப்பட்ட கழிப்பறைக்கான ஊக்கத்தொகை ரூ. 12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • எதிர்பார்க்கப்பட்ட 60 லட்சம் கழிப்பறைகளுக்குப் பதிலாக 2.10.2014 முதல் 2.10.2015 வரையான காலப்பகுதியில் 80 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • 2014-15ஆம் ஆண்டிற்கான இலக்காக இருந்த 50 லட்சம் தனிநபர்களுக்கான கழிப்பறைகளுக்கு பதிலாக 58,54,987 கழிப்பறைகள் கட்டப்பட்டன. இது திட்டமிடப்பட்ட இலக்கு 117 சதவீதம் நிறைவேற்றப்பட்ட சாதனையாகும்.
  • 2012-13, 2013-14 ஆண்டுகளில் முறையே 45.59 லட்சம் கழிப்பறைகளும், 49.76 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டன.  மறுபுறத்தில் தே.ஜ. கூட்டணி அரசின் முதல் இரண்டு ஆண்டுகளில் 2014-15 மற்றும் 2015-16 (29.02.2015 வரை) முறையே 58.54 லட்சம் கழிப்பறைகளும், 97.73 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டன.
  • 100 உயரிய தூய்மை இடங்கள் என வரலாற்று ரீதியாகவும் , கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகத் தரமுடன் உயரிய தூய்மை பெறவுள்ளன. இத்திட்டத்தின்  முதலாவது , இரண்டாவது கட்டங்களில் இவற்றில் 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
  • 5 மாநிலங்களின் 52 மாவட்டங்களில் கங்கை நதிக் கரைகளில் உள்ள 4300 கிராமங்களில் 2017 மே மாதத்திற்குள் பொதுவிடங்களில் காலைக்கடன்களை கழிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக அகற்ற திட்டமிடப்பட்டது. இதில் 3300 கிராமங்கள் அதாவது இலக்கில் 76 சதவீத கிராமங்கள் ஏற்கனவே இந்த வழக்கத்தை முற்றிலுமாக அகற்றியுள்ளன.

 

தூய்மையான நகர்ப்புற இந்தியா

  • தனிநபர்களுக்கான வீடுகளுக்குள்ளே 31 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 18.50 லட்சம் கழிப்பறைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.
  • பொதுப் பயன்பாட்டிற்கான, பொதுமக்களுக்கென 1.25 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • மொத்தமுள்ள 81,015 நகர்ப்புற வார்டுகளில் 39,995 வார்டுகள் 100 சதவீதம் வீடுதோறும் திடக்கழிவை சேகரிப்புடன் செயல்பட்டு வருகின்றன.
  • 2014இல் 18 சதவீதமாக இருந்த கழிவு பதப்படுத்தல் செயல்முறை 21.51 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • 2014இல் ஆண்டுக்கு 1.50 லட்சம் டன்களாக இருந்த கழிவிலிருந்து உரமாக மாற்றும் செயல்பாடு ஆண்டுக்கு 13.13 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது.
  • முறையான சோதனைகளுக்குப் பிறகு 614 நகரங்கள் பொது இடங்களில் காலைக் கடன் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து நகரங்களும் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

தூய்மையான கல்விநிலையம்

  • 15.08.2014 முதல் 15.08.2015 வரையிலான காலத்தில் 2.61 லட்சம் அரசு துவக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் 4.17 லட்சம் கழிப்பறைகளை கூடுதலாகக் கட்டுவது என்ற இலக்கு முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • நாடுமுழுவதிலும் உள்ள 11.21 லட்சம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 13.77 கோடி சிறுவர்-சிறுமியர் இப்போது கழிப்பறை வசதி பெற்றுள்ளனர்.

 

தூய்மையான இந்தியா இயக்கம் (நிதி)

  • கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் தூய்மையின் அளவை மேம்படுத்துவது; பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகளுக்கு முன்னுரிமை வழங்குவது.
  • நோக்கம் : கிராமங்கள், நகரங்கள், அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் செயல்படாத நிலையில் உள்ள கழிப்பறைகளை சரிசெய்தல், புதுப்பித்தல், புதிய கழிப்பறைகளைக் கட்டுதல்.
  • கழிப்பறைகளுக்கான தண்ணீர் வசதிக்கான குழாய்களை கட்டுவதற்கும், கழிப்பறைகளில் சுத்தமான நிலையை பராமரிக்க திறன் மேம்பாட்டிற்கும் பயிற்சிக்கும், இதர சுற்றுப்புற சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த நிதி பயன்படுத்திக் கொள்ளப்படும்.
  • பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், செயல்படாத கழிப்பறைகளை புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக ரூ. 365 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தூய்மையான இந்தியா வரி ( நிதி)

  • தூய்மையான இந்தியாவிற்கான கூடுதல் வரியின் மூலம் தூய்மையான இந்தியா திட்டத்திற்கு பங்களிப்பு செய்யப்படுகிறது.

 

கிராமப்புற குடிநீர் வசதி (குடிநீர் வசதி அமைச்சகம்)

  • கிராமப்புற குடிநீர் வசதி – முழுமையாக குடிநீர் வசதி பெற்ற குடியிருப்புகள் 1.4.2014இல் 73.66 சதவீதத்தில் இருந்து 77.01 சதவீதமாக உயர்வு (28.2.2017 நிலவரப்படி)
  • 2014-17 காலப்பகுதியில் 2,67,057 குடியிருப்புகள் இதன் மூலம் பயன்பெற்றன (28.2.2017 நிலவரப்படி)
  • கிராமப்புற மக்களில் 55 சதவீதம் பேருக்கு குழாய் மூலமான குடிநீர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஆர்செனிக், ஃப்ளோரைட் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள 28,000 குடியிருப்புகளுக்கு 2020க்குள் தூய்மையான குடிநீர் வழங்கும் இலக்கு.

 

கங்கையை வணங்குவோம் திட்டம் (குடிநீர் வசதி மற்றும் கங்கை புத்துயிர்ப்பிற்கான அமைச்சகம்)

  • கங்கையை சுத்தப்படுத்துவதற்கென பிரம்மாண்டமான கங்கை புத்துயிர்ப்பிற்கான திட்டம் தொடங்கப்பட்டது.

பசுமை இந்தியா (சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம்)

சுற்றுச் சூழலுக்கான அனுமதிகள் அனைத்தும் இணையத்தின் மூலமாகவே செய்வதற்கான ஏற்பாடு.

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகர்ப்புற மையங்களில் காற்றின் தரத்தை அப்போதைய நிலையிலேயே கண்காணிக்க 2015 ஏப்ரல் 6 அன்று தேசிய காற்றுத் தர அட்டவணை தொடங்கப்பட்டது.

கழிவு மேலாண்மைக்கான விதிகள் அறிவிக்கப்பட்டன.

உஜாலா (அனைவருக்கும் எல்இடி விளக்குகளை வாங்கக் கூடிய விலையில் வழங்குவதற்கான உன்னத மின்சார திட்டம்)

*  அனைவருக்கும் எல்இடி விளக்குகளை வாங்கக் கூடிய விலையில் வழங்குவதற்கான உன்னத மின்சார திட்டம். வீடுகளில் சிறப்பான வகையில் செயல்படும் விளக்கு திட்டத்தின் கீழ் 2015 ஜனவரி 5 அன்று  தில்லியில் எல் இ டி விளக்குகள் விநியோகம் தொடங்கப்பட்டது.

*  இதுவரையில் 23.13 கோடி எல் இ டி விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

*  ஆண்டுக்கு இதன் மூலம் 30,040 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

*  ஆண்டுக்கு ரூ. 12,016 கோடி அரசுக்கு சேமிப்பு.

*  ஆண்டுக்கு 24.33 மெட்ரிக் டன்கள் கரியமில வாய் வெளியேற்றம் குறைகிறது.

* எல் இ டி விளக்குகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகமானதன் விளைவாக இந்த விளக்குகளின் கொள்முதல் விலை ரூ. 310 (ஜனவரி 2104) யிலிருந்து ரூ. 38 (ஜனவரி 2017) ஆக குறைந்துள்ளது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான முன்முயற்சி (சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம்)

  • 2015 டிசம்பரில் பாரீஸ் நகரில் நடைபெற்ற சி ஓ பி -21 உச்சி மாநாட்டிற்கு முன்பாக இந்தியா தனது இலக்கை அறிவித்தது.
  • புலிகளின் எண்ணிக்கை கடந்த கணக்கீட்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014 கணக்கீட்டின்படி நாட்டில் மொத்தம் 2226 புலிகள் இருந்தன.

 

****


(रिलीज़ आईडी: 1505999) आगंतुक पटल : 592
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English