பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

குழந்தைகளுக்கு எதிரான இணையதளக் குற்றங்களை இப்போது "போக்சோ - இ பாக்ஸ்" ல் புகார் செய்யலாம்

Posted On: 23 JUN 2017 3:41PM by PIB Chennai

இணையதளக் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறுவர் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் போக்சோ - பாக்ஸில் புகார் செய்யலாம். குழந்தைகளைக் குறிவைத்துச் செய்யப்படும் குற்றங்கள் பெருமளவு அதிகரித்திருப்பதால், தேசிய ஆணையம் போக்சோ - பாக்ஸின் வீச்சை அதிகரித்துள்ளது. தற்போது இணையதள மிரட்டல், இணையதள பின்தொடர்தல், இணையப் பட உருவங்களைத் தவறாக மாற்றுதல், குழந்தை நிர்வாணப் படங்கள் முதலிவற்றைக் கையாள முடியும்.

 

பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களுடைய நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், பாதுகாப்பாளர் ஆகியோர் யாரும் இணைய வலைத்தளம் www.ncpcr.gov.in அணுகி அதிலுள்ள -பாக்ஸ் பொத்தானை அழுத்தி இணையாக குற்றங்களை பதிவு செய்யலாம். புகார்களை, அவர்கள் மின்னஞ்சலாக pocsoebox.ncpcr[at]gov[dot]in முகவரிக்கு அனுப்பலாம். கைபேசி எண் 9868235077 மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

 

குழந்தைகளை தவராகக் கையாளுதல், கைபேசி மற்றும் மின்னணு தொழில்நுட்பத்தால் புதிய வடிவங்களையும் புதிய வழிமுறைகளையும் கண்டறிந்துள்ளது. இந்தியாவில் ஒரு கோடியே முப்பது நான்கு லட்சம் குழந்தைகள் கைபேசிகளைக் கையாளுகின்றனர். இணையம் அணுகுபவர் அதைவிட அதிகம் கூடியுள்ளது. இது கற்றறியவும் பயனுள்ள தகவல்களை பெறவும் உதவுகிறது. ஆனால் மின்னணு திறமைக்குறைவும் இணைய பாதுகாப்பு முறைகளில் தளர்ச்சியும் இருப்பதால் குழந்தைகள் இணையக் குற்றங்களுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

 

போக்ஸோ பாக்ஸ் என்பது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் புகார் செய்ய எளிய, நேரான வழிமுறை ஆகும். (POCSO, 2012)

 

தேசிய ஆணையத்தால் உருவாக்கப்பட்ட "போக்ஸோ - பாக்ஸ்" கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தியால் இயக்கி வைக்கப்பட்டது.



(Release ID: 1504737) Visitor Counter : 94


Read this release in: English , Hindi