குடியரசுத் தலைவர் செயலகம்

தேசிய விளையாட்டு மற்றும் வீரதீரச் செயலுக்கான விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

प्रविष्टि तिथि: 29 AUG 2017 9:27AM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 29, 2017) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தேசிய விளையாட்டு மற்றும் வீரதீரச் செயலுக்கான விருதுகளை வழங்கினார்.  விளையாட்டுகளில் சாதனை புரிந்த இளம் வயதினர் 14 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  இதில் நான்கு பேர் 2015 ஆம் ஆண்டு நடந்த ஆசிய பள்ளி சாம்பியன் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்கள்.  மற்றொருவர் இதே பிரிவில் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம்  பெற்றவர்.  2016 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு சம்மேளனம் நடத்திய ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற 9 பேரும் இதில் அடங்குவர்.

 

********


(रिलीज़ आईडी: 1501273) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English