கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

சென்னை ஸ்கூல் ஆப் ஷிப் மேனெஜ்மென்ட் அங்கீகாரம் ரத்து- மத்திய கப்பல் அமைச்சகம் தகவல்

Posted On: 22 AUG 2017 5:38PM by PIB Chennai

மத்திய கப்பல் அமைச்சகத்தின் கீழ் மும்பையில் இயங்கும் கப்பல் துறையின் தலைமை இயக்குனர், சென்னை ஸ்கூல் ஆப் ஷிப் மேனெஜ்மென்ட் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை ஸ்கூல் ஆப் ஷிப் மேனெஜ்மென்ட் எண் 36, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு என்ற முகவரியில் இயங்கி வருகிறது.

 

முதற்கட்ட முதல் உதவி (Elementary First Aid), கடற்சார் பொறியியலாளர்களுக்கான மாற்று பயிற்சி (Marine Engineers-Alternate Tr. Scheme), மருத்துவ முதல் உதவி (Medical First Aid), சுய பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு (Personal Safety & Social Responsibilities) ஆகிய படிப்புகளுக்கான அனைத்து அங்கீகாரங்களையும் கப்பல் அமைச்சகம் நிரந்தரமாக ரத்து செய்துள்ளது. 

 

வணிக கடற்படையில் சேர விரும்பும் மாணவர்கள் சென்னை ஸ்கூல் ஆப் ஷிப் மேனெஜ்மென்ட் கல்லூரியில் சேர வேண்டாம் என்று  அமைச்சகம் எச்சரித்துள்ளது.  மேற் குறிப்பிட்டுள்ள படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வணிக கடற்படையில் பணிபுரிவதற்கான சென்னை ஸ்கூல் ஆப் ஷிப் மேனெஜ்மென்ட் வழங்கும் சான்றிதழ்கள் செல்லாது என்று கப்பல் அமைச்சகத்தின் வணிக கப்பல் துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

 

*****



(Release ID: 1500357) Visitor Counter : 133


Read this release in: English