நிதி அமைச்சகம்
உணவு அல்லது உறையுளுக்காக கல்விநிறுவனங்கள் அவற்றின் மாணாக்கரிடமிருந்து விடுதியில் தங்கும் வசதி அளிப்பதற்காக வசூலிக்கும் ஆண்டுச் செலுத்தும் தொகை / கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. இல்லை; ஒரு கல்வி நிறுவனம் அதனுடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றைய பணியாளர்களுக்கு அளிக்கும் சேவைகள் ஜி.எஸ்.டி. யில் இருந்து முழு விதிவிலக்கைப் பெறுகின்றன.
Posted On:
13 JUL 2017 4:03PM by PIB Chennai
விடுதியில் தங்குவதற்கான ஆண்டு செலுத்தும் தொகை/ கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. 18% விதிக்கப்படும் என்ற அறிவுப்புகள் வருகின்றன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. ஜி.எஸ்.டி. நடைமுறைக் காலத்தில் கல்வி மற்றும் அதைச் சார்ந்த சேவைகளோடு தொடர்புடைய வரிச் செலவினத்தில், கல்வியோடிணைந்த ஒரு சிலவற்றிற்கு வட்டிவீதம் குறைக்கப் பட்டிருக்கிறதே தவிர வேறெந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை.
ஒரு கல்வி நிறுவனத்தால் அதனுடைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றைய பணியாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் முழு விலக்கைப் பெறுகின்றன என்பதை இங்குக் குறிப்பிடலாம். கல்வி நிறுவனம் என்பது கல்வி வழங்கும் நிறுவனமாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது
அ) மழலையர் கல்வியிலிருந்து மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது அதற்கு சமமான நிலை வரை;
ஆ) கல்வி நடைமுறையில் உள்ள சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித்தகுதியை கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பெறுவது
இ) அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்விமுறையின் ஒரு பகுதி கல்வி.
இவ்வாறாக உண்டி / உறையுள் வழங்கும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் மழலையர் கல்வியிலிருந்து மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது அதற்கு சமமான நிலை வரை அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிக்கு வழி வகுக்கும் கல்வி வரை ஜி.எஸ்.டி. - யிலிருந்து முழு விலக்குப் பெறுகின்றன. அத்தகைய கல்வி நிறுவனங்களால் விடுதியில் தங்குவதற்காக மானவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஆண்டுச் செலுத்தும் தொகை/ கட்டணம் ஜி.எஸ்.டி வரி பெறாது.
(Release ID: 1496630)
Visitor Counter : 101