சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

என் எச் ஏ ஐ அதனுடைய அலுவலர்களுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த ஊடகச் செய்திக்கு உட் புலனாய்வைத் தொடங்கி பதிலளித்து இருக்கிறது

Posted On: 12 JUL 2017 11:46AM by PIB Chennai

அலுவலர்களுக்கு வெளிநாட்டு கம்பெனி ஒன்றால் 2011- 15 கால இடைவெளியில் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த ஊடகச் செய்திக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை அதிகாரியின் பதில் அறிக்கை கீழே கொடுக்கப் பட்டுள்ளது:

 

திருவாளர்கள் சி டி எம் ஸ்மித் நிறுவனம், யூஎஸ்ஏ ஆல் என்எச்ஏஐ அலுவர்களுக்கு 2011-15 கால இடைவெளியில் இலஞ்சம் கொடுத்ததை ஒத்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. திருவாளர்கள் சி டி எம் ஸ்மித் நிறுவனம், யூஎஸ்ஏ இந்திய சாலை அமைப்புப் பணித்துறையில் சிலகாலமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இருந்தபோதிலும், 2015 ல் என்எச்ஏஐ திட்டப்பணிகளில் ஒன்றில், டோல்பூர்-மொரினா பிரிவு என்எச்-3 ல், அவர்களின் திறன்குறைந்த பங்கேற்புக்காக எதிர்கால திட்டப்பணி ஏலம் கேட்பதில் இருந்து 3 (மூன்று) மாதங்களுக்குத் தடைசெய்யப்பட்டார்கள். தற்சமயம், திருவாளர்கள் சிடிஎம் ஸ்மித் நிறுவத்துக்கு என்எச்ஏஐ யுடன் எந்த நடைமுறையில் உள்ள ஒப்பந்தமும் இல்லை. சாட்டப்பட்டுள்ள குற்றத்தின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த ஊடகச் செய்தியை உட்புலானாய்வு செய்ய என்எச்ஏஐ தொடங்கி இருக்கிறது.



(Release ID: 1496469) Visitor Counter : 68


Read this release in: English