நிதி அமைச்சகம்

செய்தி: ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் வருவதால் வீட்டுவசதிச் சங்க, குடியிருப்போர் நல அமைப்புகளின் சேவைகள் அதிக விலைமதிப்புக்கு உட்படா; வீட்டுவசதிச் சங்கங்கள் அதன் உறுப்பினர்களுக்கு அளிக்கும் சேவைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

Posted On: 13 JUL 2017 3:48PM by PIB Chennai

ஜிஎஸ்டி வரிவிதிப்பு பட்டியிலுக்குள் இருப்பதால்,  வீட்டுவசதிச் சங்கங்கள் [குடியிருப்போர் நல அமைப்புகள் (RWA)]  அளிக்கும் சேவைகள் இனிமேல் அதிகம் விலைமதிப்பு கொண்டவையாக மாறும் என்று சில ஊடகச் செய்திகள் வந்துள்ளன; இவற்றிற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

குடியிருப்போர் நல அமைப்புகள்  (நிறுவனமாகப் பதிவுச் செய்யப்படாத அல்லது இலாப நோக்கற்றவையாக பதிவுச் செய்யப்பட்ட அமைப்பு) தங்களது உறுப்பினர்களுக்கு  அளிக்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள் திரும்ப் பெறுதல் அல்லது அதன் உறுப்பினர்களின் பொதுப் பயன்பாட்டிற்கு அளிக்கும் சேவைகள் மற்றும் பொருட்களுக்கு ஒருமாதத்திற்கு ஓர் உறுப்பினருக்கு ரூபாய் 5000 வரையில் சந்தா/பங்களிப்பாகப் பெறும் வீட்டுவசதிச் சங்கம் அல்லது குடியிருப்போர் அமைப்பிற்கு இது பொருந்தும்.

அது மட்டுமின்றி, ஓரு வருவாய் ஆண்டில் குடியிருப்போர் நல அமைப்பின்  ஆண்டு வரவு செலவு ரூ20 இலட்சங்களுக்குள் இருந்தால், ஓர் உறுப்பினருக்கான கட்டணம் மாதம் ரூ5000த்திற்கு அதிகமாக இருந்தாலும் அத்தகைய சேவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்களிடம் வசூலிக்கும் மாதச் சந்தா/ பங்குத் தொகை ரூ 5000க்கும் மேல் இருந்து, அந்தச் சேவைகள் மற்றும் பொருட்கள் அளித்த வகையில், அந்த அமைப்பின் ஆண்டு வரவு செலவு ரூ20 இலட்சங்களுக்கும் மேல் இருந்தால் அந்தக் குடியிருப்போர் நல அமைப்பு ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கும். இப்போது, ஜிஎஸ்டி வரிவிதிப்பில் குடியிருப்போர் நல அமைப்பின் ஜிஎஸ்டி சுமை குறைவாகவே இருக்கும். ஏனெனில், ஜெனரேட்டர்கள், நீர் இறைக்கும் பம்புகள், புல்தரை நாற்காலிகள் போன்ற மூலதனப் பொருட்களுக்கும், நீர்க்குழாய்கள், பைப்புகள், கழிவறைச் சாதனங்கள் போன்ற சுகாதாரம் தொடர்பானப் பொருட்கள் மற்றும் பழுதுபார்த்தல், பராமரிப்புப் போன்ற உள்ளிடல் சேவைகளுக்கு, ஏற்கனவே அவர்கள் செலுத்தியிருக்கும் வரியை, அந்த அமைப்புகள் திரும்பப் பெறும் tax credit வாய்ப்பு இப்போது உள்ளது. இதுபோன்று, சாதாரணப் பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களுக்குச் செலுத்தப்பட்ட, மத்தியக் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டும் வரியைத் திரும்பப் பெறும்- tax credit- இந்த ஜிஎஸ்டி காலத்திற்குமுன் இல்லையாதலால், அப்போது இவை குடியிருப்போர் நல அமைப்புகளுக்குச் சுமையாக இருந்தன.

இவ்வாறு, இந்த ஜிஎஸ்டி காலத்தில், வீட்டுவசதிச் சங்கங்களின் குடியிருப்போர் நல அமைப்புகள் (RWA) அதன் உறுப்பினர்களுக்கு அளிக்கும் சேவைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

****



(Release ID: 1496125) Visitor Counter : 61


Read this release in: English , Gujarati