மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் காம்பியாவின் போக்குவரத்து, பணிகள் மற்றும் அடிப்படை கட்டுமானத்துறை அமைச்சர் திரு. பாய் லாமின் ஜோபே, மலாவியின் தொழில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ஹென்றி முஸ்ஸா ஆகியோரைச் சந்தித்தார்
மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் காம்பியாவின் போக்குவரத்து, பணிகள் மற்றும் அடிப்படை கட்டுமானத்துறை அமைச்சர் திரு. பாய் லாமின் ஜோபே, மலாவியின் தொழில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ஹென்றி முஸ்ஸா ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்தார். இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய திரு. சிங் இந்தியா - காம்பியா இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்க வேளாண்மை ஒரு முக்கிய துறை என்றும், காம்பியாவுக்குத் தொழில்நுட்ப உதவியை வழங்க இந்தியா விரும்புகிறது என்றும் கூறினார்.
வெங்காயம், கோதுமை, கோதுமை மாவு, காய்கறிக் கொழுப்புகள், எண்ணெய் சர்க்கரை போன்றவற்றை காம்பியா பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது என்று கூறிய வேளாண் அமைச்சர், இந்தப் பொருட்கள் அனைத்தையும் இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும் என்றார்.
இதற்கிடையே இந்தியாவில் வரியில்லா வர்த்தக முன்னுரிமை திட்டத்தை காம்பியா ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியாவுக்கு ஏற்றுமதியை அதிகரித்து இந்தத் திட்டத்தின் பயனை காம்பியா அடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மலாவியின் தொழில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ஹென்றி முஸ்ஸாவையும் சந்தித்த வேளாண் அமைச்சர், இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்