Print
XClose
Press Information Bureau
Government of India
வெளியுறவுத்துறை அமைச்சகம்
07 MAR 2018 7:36PM by PIB Chennai
இந்தியா - பிரான்ஸ் இடையே இடம் பெயர்தல் மற்றும் பரிவர்த்தனை கூட்டுறவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான இடம் பெயர்தல் மற்றும் பரிவர்த்தனை கூட்டுறவு தொடர்பான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இந்தியாவிற்கு விரைவில் மேற்கொள்ள இருக்கும் பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மக்கள் இடையே உள்ள தொடர்பை அதிகரித்தல், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிர்ச்சிபெற்ற பணியாளர்கள் ஆகியோரின் பரிவர்த்தனையை மேம்படுத்துதல் மற்றும் இருதரப்பிற்கும் இடையேயான முறையற்ற இடம்பெயர்தல்கள் மற்றும் ஆள் கடத்தல் போன்ற பிரச்சனைகளில் ஒத்துழைப்பை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும். பிரான்ஸ் நாட்டுடனான பன்முகத்தன்மை கொண்ட உறவுகளை இந்தியா விரைவாக விரிவு படுத்தி வருகிறது என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு அத்தாட்சியாகும்.

இந்த ஒப்பந்தம் தொடக்கத்தில் ஏழு ஆண்டுகாலத்திற்கு செல்லுபடியாகும். தானாகவே, இந்த காலகெடுவை புதுபித்துக்கொள்ளவும் இதில் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூட்டு பணி குழு மூலமான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தவும் ஒப்பந்தம் வகை செய்கிறது.  

****