• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஒரு கோடி பெண்களுக்கு மருந்து தெளிக்க கூடிய ட்ரோன் இயந்திரம் வழங்க பிரதமர் முடிவு; மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்

प्रविष्टि तिथि: 13 JAN 2024 2:29PM by PIB Chennai

நாட்டில் ஒரு கோடி பெண்களுக்கு விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க கூடிய ட்ரோன் இயந்திரம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்தார்.

குடியாத்தம் அருகே அக்ராவரம் என்ற கிராமத்தில் வளர்ச்சி அடைந்த பாரத லட்சியப் பயணம் நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் வி கே சிங் கலந்து கொண்டு மத்திய அரசின் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    

அதனைத் தொடர்ந்து நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நாட்டில் பெண்கள் விவசாயிகள் இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி உள்ளார். வேளாண் பயிர்களுக்கு ட்ரோன் மூலம்  மருந்து தெளிக்கும் இயந்திரம் . முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஒரு கோடி பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

     

இதற்குக் காரணம் பெண்கள் தங்களுடைய அறிவுத்திறனை பயன்படுத்தி வருமானத்தை பல மடங்காக அதிகரிக்க, இயந்திரங்களை நல்ல முறையில் கையாளுவார்கள். எனவேதான் பெண்கள் பெயரில் இந்த ட்ரோன் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

நாட்டில் யாரும் வறுமையில் வாழக்கூடாது என்பதற்காக குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது,

     

இனிவரும் ஐந்தாண்டு காலத்திற்கும் இந்த உணவு தானியம் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும். தற்போது நாட்டில் 80 கோடி நபர்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

வேளாண்மையில் விவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டக் கூடிய வகையில் ஆண்டுக்கு 3 முறை 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதால் நாட்டில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்றனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன திட்டங்கள் நாட்டு மக்களுக்காக கொண்டு வந்துள்ளார் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரத லட்சியப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது.

     

மத்திய அரசு திட்டங்கள் கிடைக்காத தகுதியான பயனாளிகள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு திட்டப் பலன்களை உடனடியாக பெறலாம்.

ஏழை எளிய மக்களுக்கு  பிரதமர் நரேந்திர மோடி வீட்டு வசதி திட்டத்தில் வழங்கப்படும் வீடுகளில், தமிழகத்திற்கு மட்டும் சுமார் 11 லட்சம் வீடுகள் கட்டி பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் வி கே சிங் கூறினார்.

***

MS/PKV/DL


(रिलीज़ आईडी: 1995831) आगंतुक पटल : 90
Link mygov.in
National Portal Of India
STQC Certificate