• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது


மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தகவல்

Posted On: 13 DEC 2023 3:38PM by PIB Chennai

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டி ரவிக்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி இத்தகவலை தெரிவித்தார்.

2016 - 2017 நிதியாண்டில் 690 கோடியே 59 லட்சம் ரூபாயும், 2017 -2018 நிதியாண்டில் 848 கோடியே 48 லட்சம் ரூபாயும், 2018 -2019 நிதியாண்டில் 502 கோடியே 79 லட்சம் ரூபாயும், 2019 -2020 நிதியாண்டில் 487 கோடியே 52 லட்சம் ரூபாயும், 2020 – 2021 நிதியாண்டில் 78 கோடியே 62 லட்சம் ரூபாயும், 2021 – 2022 நிதியாண்டில் 928 கோடியே 92 லட்சம் ரூபாயும் மத்திய அரசின் பங்காக தமிழ்நாட்டிற்கு பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமூக பொருளாதார பிரிவுவாரி கணக்கெடுப்பு 2011-ன்படி தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, 3,71,382  சுவரும், கூரையும் உள்ள வீடுகளும், 4,45,459 சுவர் மட்டும் உள்ள வீடுகளும், 18,63,373 கூரை மட்டும் உள்ள வீடுகள் என மொத்தம்  26 லட்சத்து 80 ஆயிரத்து 214 குடிசை வீடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே போல் புதுச்சேரியில் 9,655 சுவரும், கூரையும் உள்ள வீடுகளும், 12,499 சுவர் மட்டும் உள்ள வீடுகளும், 37,534 கூரை மட்டும் உள்ள வீடுகளும் என மொத்தம் 59,688 குடிசை வீடுகள் உள்ளதாக அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தகைய குடிசை வீடுகளை அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளாக கட்டித் தருவதற்கான பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டம் பற்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வளர்ச்சியடைந்த இந்தியா லட்சியப் பயணத்தின் போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பயனாளி பதிவுகளும் செய்யப்படுகின்றன.

•••••

AD/IR/RR/KPG


(Release ID: 1985817) Visitor Counter : 72


Link mygov.in