• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் ஃபிலிம் கிளப் திறக்கப்பட்டது

Posted On: 11 APR 2023 6:09PM by PIB Chennai

புதுச்சேரி பல்கலைக்கழக சமூகக் கல்லூரியில் பிலிம் கிளப் தொடங்கப்பட்டது இதனை தமிழ் நடிகர் ஆடுகளம் முருகதாஸ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடக்க உரையை ஆற்றிய ஆடுகளம் முருகதாஸ், தனது திரையுலகப் பயணத்தின் போது தான் அனுபவித்த போராட்டங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், திரையுலகில் நுழைய விரும்பியபோது தனக்குக் கிடைக்காத திரைப்படத் தயாரிப்பின் தொழில்நுட்ப அம்சத்தைக் கற்றுக்கொள்வதில் விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற ஊடகப் படிப்புகள் மாணவர்களுக்கு எவ்வாறு சாதகமாக இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஊடகத்துறையில் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தியதோடு, குறிப்பாக இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பல்வேறு வகையான புத்தகங்களில் அதிக நேரத்தைச் செலவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மாலதி வரவேற்றார். பிலிம் கிளப் தொடங்குவதற்கான நோக்கம் குறித்து பேசிய விஷுவல் கம்யூனிகேஷன் துறையின் உதவிப் பேராசிரியர் டாக்டர்.சி.சுரேஷ் குமார், வகுப்பறைக்கு வெளியே கல்வி வாய்ப்புகளை வழங்கும் மற்றும் பிரபலமான பொழுதுபோக்கு ஊடகங்களின் பல்வேறு அம்சங்களை மாணவர்களுக்கு பிலிம் கிளப் அறிமுகப்படுத்தும் என்றார். மேலும் சினிமா மற்றும் கிளப் மாணவர்களுக்கு குழு மனப்பான்மை, படைப்பாற்றல், சுய-உந்துதல் மற்றும் சமூக/தார்மீக விழுமியங்களின் நீண்டகால முத்திரைகள் ஆகியவற்றைப் பெறவும், தனித்துவமான திரைப்படங்கள் மூலம் பல்வேறு கலாச்சார பின்னணிகளைக் கொண்ட மாணவர்களை அறிமுகப்படுத்தவும், மாணவர்களை செயலில் பார்வையாளர்களாக மாற்றவும் சினிமா உதவும் என்று கூறினார். கணிதத் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் தங்கம் நன்றி கூறினார். விஷுவல் கம்யூனிகேஷன் துறையின் உதவி பேராசிரியை டாக்டர் கிருத்திகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

***

 


(Release ID: 1915682) Visitor Counter : 111


Link mygov.in