சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை தெற்கு அஞ்சல் கோட்டம் சார்பில் டிசம்பர் 4-ல் குறைதீர் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2026 2:20PM by PIB Chennai

சென்னை மாநகர தெற்கு அஞ்சல் கோட்டம் சார்பில், வரும் 2026 டிசம்பர் 4-ம் தேதி மாலை 4 மணிக்கு வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை தியாகராயர் நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தியாகராயர் நகர் அஞ்சல் அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும். சென்னை தெற்குக் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அஞ்சல் துறையின் சேவைகள், திட்டங்கள் தொடர்பான வாடிக்கையாளர்களின் குறைகள் நேரடியாகக் கேட்டறியப்படும்.

வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை டிசம்பர் 2-ம் தேதிக்குள், "சென்னை தெற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயர் நகர், சென்னை – 600017" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் சேவை தொடர்பான புகார்களில், தபால் அனுப்பிய தேதி, நேரம், அனுப்புநர், பெறுநர் ஆகியோரின் முழு முகவரி, பதிவு ரசீது எண், பதிவு செய்த அஞ்சல் அலுவலகம் ஆகிய விவரங்களைக் குறிப்பிட வேண்டும். பணவிடை, பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் ஆகியவற்றுக்கான புகார்களுக்கும் இந்த விவரங்கள் அவசியம்.

அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களில் கணக்கு அல்லது காப்பீட்டு எண், வாடிக்கையாளரின் பெயர், முழு முகவரி, அஞ்சல் அலுவலகத்தின் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

புகார்களை சாதாரண அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அஞ்சல் உறையின் மீது 'கோட்ட அளவிலான குறைதீர் கூட்டம் – சென்னை மாநகர தெற்குக் கோட்டம்' என்று குறிப்பிட வேண்டும்.

***

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2343218) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English