சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பாக அரசியலமைப்பு தினக் கொண்டாட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2026 7:52PM by PIB Chennai

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை, தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அரசியலமைப்பு தினத்தைக் கொண்டாடியது. ‘அரசியலமைப்பு @77: டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு தொலைநோக்குப் பார்வையும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலமும்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சரும், டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் வீரேந்திர குமார், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இணையமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திரு பி.எல். வர்மா, அமைச்சகத்தின் செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூக நீதி, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கொள்கைகள் இன்றும் தொடர்ந்து வழிகாட்டுவதாகத் தெரிவித்தார். மேலும், சமத்துவம் நிறைந்த, அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டமைப்பதில் அரசியலமைப்பு மாண்புகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின்போது முன்னாள் இந்திய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரை வாசிக்கப்பட்டதுடன், ‘அரசியலமைப்பு சார்ந்த நிர்வாகமும், டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் மரபும்’ என்ற தலைப்பில் அவர் சிறப்புரை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342209&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2342318) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी