இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 7:43PM by PIB Chennai
2027-28 மத்திய பட்ஜெட்டைத் தயாரிப்பது தொடர்பாக, 2026 நவம்பர் 16 முதல் 26 வரை மத்திய நிதி, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
13 துறைகள், பங்குதாரர் குழுக்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் இந்த ஆலோசனைகளில் பங்கேற்றனர். பொருளாதார விவகாரத் துறையின் செயலாளர் திருமதி அனுராதா தாக்கூர், தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தொடர்புடைய அமைச்சகங்கள், துறைகளின் செயலாளர்களும் இந்த விவாதங்களில் கலந்துகொண்டனர்.
புத்தாக்கத்தால் வழிநடத்தப்படும் வளர்ச்சியை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல், சமூக, பொருளாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மீள்திறன் மிக்க, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு பொருளாதாரத்தைக் கட்டமைத்தல் ஆகியவை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2342200®=3&lang=1
****
SK/BR/SH