இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 4:23PM by PIB Chennai
ஏப்ரல்–அக்டோபர் 2026 காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டுத் தயாரான எஃகு நுகர்வு 7.5% வளர்ச்சி கண்டு 99.4 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது; எஃகு விலையில் மாதந்தோறும் நிலைத்தன்மையும் நிலவுகிறது என மத்திய எஃகு அமைச்சகத்தின் தற்காலிகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல்–அக்டோபர் 2026-ல் கச்சா எஃகு உற்பத்தி 99.2 மிட (2.6% வளர்ச்சி) மற்றும் தயாரான எஃகு உற்பத்தி 95.7 மிட (4.1% வளர்ச்சி) ஆகப் பதிவாகியுள்ளது. இதே காலத்தில் தயாரான எஃகு இறக்குமதி 4.90 மிட ஆகவும், ஏற்றுமதி 3.98 மிட ஆகவும் உள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு பெருநகரங்களின் சராசரி அடிப்படையில் நவம்பர் 2026-ல் டிஎம்டி எஃகு டன் ஒன்றுக்கு ₹66,020 ஆகவும், சூடாக உருட்டப்பட்ட எஃகு சுருள் காயில் ₹77,703 ஆகவும் உள்ளது. இந்திய உருக்கு ஆணையம் மற்றும் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் செயல்பாடுகளை அமைச்சர் திரு. எச்.டி. குமாரசாமி ஆய்வு செய்தார்; அக்டோபர் 2026 வரை 112 எஃகு உற்பத்தியாளர்களுக்கு ‘பசுமை எஃகு’ சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: http://pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341960®=3&lang=1&_gl=1
****
SK/NB/SH