இடுகை இடப்பட்ட நாள்:
26 NOV 2026 7:13PM by PIB Chennai
Photo1_20261126193902_737d80.jpeg)
தமிழ்நாடு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் முதல் பெண்மணியுடன் இணைந்து, முதலாவது காசிதமிழ்சங்கமம் எக்ஸ்பிரஸ் சிறப்புரயிலை (ரயில்எண்: 06041, கன்னியாகுமரி – பனாரஸ் சிறப்புரயில்) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று (நவம்பர் 26, 2026) கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். இவ்விழாவில் சென்னை ஐஐடி இயக்குநர் வி காமகோடி மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் (CICT) இயக்குநர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆளுநர் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைப் புதுப்பித்து உறுதிப்படுத்தும் இந்தமுன்னெடுப்பில் கலாச்சாரத் தூதுவர்களாகப் பங்கேற்றதற்காக அவர்களை பாராட்டினார். இந்நிகழ்வில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் திரு ஐ செந்தில்குமார், தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் சென்னை ஐஐடி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
Photo2_20261126193918_51ce89.jpeg)
காசிதமிழ்சங்கமம் 5.0 நிகழ்விற்கான 207 பிரதிநிதிகள் அடங்கிய முதல் குழுவினர் (சென்னை எழும்பூரிலிருந்து ஏறிய 105 பிரதிநிதிகள் உட்பட) இந்த முதலாவது சிறப்பு ரயிலில் பயணிக்கின்றனர். இவர்கள் நாளை (நவம்பர் 27, 2026) பனாரஸ் சென்றடைய உள்ளனர். நிகழ்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் தடையற்ற பயணத்தை உறுதிசெய்யும் வகையில், கன்னியாகுமரி, சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களை பனாரஸுடன் இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களைத் தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவப்பிரதிநிதிகள், இத்திட்டத்தில் இணைந்திருப்பதில் பெருமிதம் தெரிவித்ததோடு, இதன்மூலம் கிடைக்கவுள்ள கற்றல் அனுபவத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் கூறினர். வாரணாசியில், வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், காளியாட்டம் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் தமிழ்நாட்டின் வளமான கலைப்பாரம்பரியத்தை மாணவர்கள் வெளிப்படுத்த உள்ளனர்.
photo3_20261126193934_42c4a2.jpeg)
காசி தமிழ் சங்கமம் 5.0:
சுதந்திரப்பெருவிழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காசிதமிழ்சங்கமம், இந்தியாவின் இரு பழமையான கற்றல் மற்றும் கலாச்சாரமையங்களுக்கு இடையேயான பரஸ்பரப்பிணைப்பை வளர்ப்பதன்மூலம் 'ஒரேபாரதம் உன்னதபாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்தும் மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். மத்திய கல்வி அமைச்சகத்தால் சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் (BHU) இணைந்து நடத்தப்படும் ஒருமாத கால 5-வதுபதிப்பான இந்நிகழ்வு, ‘திருக்குறள் கற்போம்’ (Let’s learn Thirukkural) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, மக்களுக்கு இடையேயான தொடர்புகளையும் பகிரப்பட்ட தேசியபாரம்பரியத்தையும் வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்கள் மற்றும் பயண அட்டவணைகளுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: iitm.ac.in
***
TV/SH