புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களின் மாதாந்திர அறிக்கை வெளியீடு: அக்டோபர் 2026 நிலவரப்படி ₹38.11 லட்சம் கோடி மதிப்பிலான 1,862 திட்டங்கள் கண்காணிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 NOV 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 'பைமானா' தளம் வாயிலாக மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணித்து வருகிறது. அக்டோபர் 2026 நிலவரப்படி, ₹38.11 லட்சம் கோடி மதிப்பிலான 1,862 திட்டங்களில் இதுவரை ₹17.87 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
மொத்தத் திட்டங்களில் போக்குவரத்து, தளவாடத் துறைகளில் 1,324 திட்டங்களும் (₹20.37 லட்சம் கோடி), எரிசக்தித் துறையில் 229 திட்டங்களும் (₹11.31 லட்சம் கோடி) இடம்பெற்றுள்ளன; அக்டோபர் மாதத்தில் 38 புதிய திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 2026 மாதத்திற்கான விரைவு அறிக்கை டிசம்பர் 28, 2026 அன்று வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341198®=3&lang=1&_gl=1
****
SK/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2341645)
வருகையாளர் எண்ணிக்கை : 4