சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
24 NOV 2026 6:26PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் தாக்கூர்கஞ்ச் பகுதியில் உள்ள சித்தார்த் போதை மறுவாழ்வு மையத்திற்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பாரதிய சமாஜ் சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் இம்மையத்தில், சிகிச்சை பெற்று வருபவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், மருத்துவ மற்றும் ஆலோசனை வசதிகளைக் கேட்டறிந்தார்.
போதை மறுவாழ்வு மையங்கள் வெறும் சிகிச்சை நிலையங்களாக மட்டுமல்லாமல், பயனாளிகளின் உடல், மன, உணர்வு மற்றும் சமூக மறுஒருங்கிணைப்பை ஆதரிக்கும் முழுமையான மறுவாழ்வு மையங்களாகச் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
மையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கட்டிடத்திற்குப் புதிதாக வர்ணம் பூசி அறைகலன்களை மேம்படுத்தவும் நிர்வாகத்திற்கு அவர் அறிவுறுத்தினார். சமையலறை மற்றும் தூய்மை ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர், சுகாதாரத்தைப் தொடர்ந்து பராமரிக்க உத்தரவிட்டார். மேலும், பயனாளிகளின் மன மற்றும் ஆன்மீக நலனுக்காகத் தினசரி வழிபாட்டிற்கு அமைதியான இடத்தை ஒதுக்கவும், 'வாழும் கலை' பிரம்மா குமாரிகள் போன்ற அமைப்புகளை அழைத்து ஊக்கமளிக்கும் அமர்வுகளை நடத்தவும் அவர் ஆலோசனை வழங்கினார்.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340882®=3&lang=1
****
SK/NB/SH