மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய பால்வள தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2026 1:36PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை சார்பில் தேசிய பால்வள தினம் 2026, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாபு சபாகரில் 2026 நவம்பர் 26 அன்று கொண்டாடப்பட உள்ளது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். பீகார் முதலமைச்சர் திரு சாம்ராட் சௌத்ரி, மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல், பீகார் மாநில பால்வளத் துறை அமைச்சர் திரு நந்த் கிஷோர் ராம் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில், கால்நடை, பால்வளத் துறையின் உயரிய விருதான தேசிய கோபால் ரத்னா விருதுகள் 2026-ஐ மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில், பால்வள மேம்பாட்டுக்கான தேசியத் திட்டத்தின் கீழ் தரவு செயலாக்கம் விநியோகம், பால் சேகரிப்பு அலகுகள், தாது உப்புக் கலவை ஆலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா பிட்டாவில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் திறன் கொண்ட பால் பதனப்படுத்தும் ஆலை ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.

மேலும், பால் கூட்டுறவு சங்கங்களின் தரமதிப்பீட்டிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், இணையதள சேவை, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை நோக்கிய பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் கால்நடைகள் மற்றும் பால்வளத் துறைக்கான செயல்திட்டம், அடிப்படை கால்நடை பராமரிப்புப் புள்ளிவிவரங்கள் 2026 ஆகியவையும் வெளியிடப்பட உள்ளன.

வெண்மைப் புரட்சியின் தந்தை டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய பால்வள தினம் கொண்டாடப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340789&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340823) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी