PIB Backgrounder
azadi ka amrit mahotsav

நக்சல்வாதம்வாதம் இல்லாத இந்தியா

ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் இடதுசாரி தீவிரவாதம் முறியடிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 24 NOV 2026 11:38AM by PIB Chennai

நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமே இல்லை என்ற நிலையை எட்டி, நக்சல்வாதம் இல்லாத இந்தியா என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை நாடு அடைந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு விரிவாக்கம், சரணடைந்தவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள், பழங்குடியினர் நலன், மேம்பட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் கூடிய ஒருங்கிணைந்த செயல்திட்டத்தால் இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளில், அரசின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தல், தொலைதூரப் பகுதிகளுக்கு உள்கட்டமைப்பை விரிவுபடுத்துதல், நலத்திட்டங்களை வழங்குதல் ஆகிய மூன்று முக்கியத் தூண்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கொள்கை, செயல் திட்டத்தின் மூலம் பாதுகாப்புப் படைகள் வலுப்படுத்தப்பட்டன. 668 புதிய பாதுகாப்பு முகாம்கள், 615 மேம்படுத்தப்பட்ட காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆளில்லா விமானங்கள், செயற்கைக்கோள் படங்கள், செயற்கை நுண்ணறிவுத் தரவு பகுப்பாய்வு போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் நக்சல்வாத ஒழிப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தன.

ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட், ஆபரேஷன் டபுள் புல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளால் மாவோயிஸ்ட் கட்டமைப்புகள் முறியடிக்கப்பட்டன. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் நக்சல் தீவிரவாதிகளுக்கான நிதி ஆதாரங்கள் தடுக்கப்பட்டு, ரூ. 92 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அதே சமயம், ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைபவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை உடனடி நிதியுதவி, 36 மாதங்களுக்கு ரூ. 10,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கும் மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 2026 நவம்பர் வரை சுமார் 8,526 நக்சல்வாதிகள் சரணடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15,189 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டு, 9,561 தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1,804 வங்கிக் கிளைகள், 6,025 அஞ்சல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பழங்குடியின மாணவர்களுக்காக 259 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், 90,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் பாதுகாப்பு முகாம்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்களாக மாற்றப்பட்டு மக்களுக்கு அரசுச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய நடவடிக்கைகளின் பலனாக, 2014-ம் ஆண்டில் 126-ஆக இருந்த இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை, 2026 மார்ச்-ஏப்ரல் மாதத்தில் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. வன்முறைச் சம்பவங்கள் 2014-ல் 870-ஆக இருந்த நிலையில், 2026-ல் 33-ஆகக் குறைந்துள்ளது. 2026 நவம்பர் 8 அன்று பஸ்தரில் உள்ள கோப்ரா தளத்தில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர், நாட்டின் அனைத்து மாவட்டங்களும் நக்சல்வாதப் பிடியிலிருந்து விடுபட்ட முதல் தீபாவளி இது எனக் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340727&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340817) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati