இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 8:05PM by PIB Chennai
போதைப்பொருள் இல்லாத இளைஞர்களைக் கொண்ட வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் 100 வார கால விழிப்புணர்வுப் பிரசாரத்தின் 10-வது வாரத்தில் மை பாரத் - நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட இயக்கங்களில் 73,529 பேர் பங்கேற்றுள்ளனர்.
மொத்தம் 162 கல்வி நிறுவனங்களில் 366 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 17,699 இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும், போதைப்பொருள் பயன்படுத்துவதில்லை என உறுதிமொழி ஏற்கும் 200 நிகழ்ச்சிகளில் 28,360 பேர் பங்கேற்றனர். அடித்தள அளவில் 1,006 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
2026 ஆகஸ்ட் 2-ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தப் பிரசார இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். போதைப் பொருள் தடுப்பு, பாதுகாப்பு, மீட்பு, தலைமைத்துவம் ஆகிய நான்கு முக்கிய நோக்கங்களுடன் இந்த இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
விளையாட்டுப் போட்டிகளில் 48.1 சதவீதம் பெண்கள் பங்கேற்றனர். பிரச்சார இயக்கத்தில் போபாலில் அதிகபட்சமாக 10,403 பேர் பங்கேற்றனர். சென்னையில் 9,175 பேர் பங்கேற்றனர்.
கபடி, கோ-கோ, கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுடன் பேரணிகள், வீதி நாடகங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டன. தேசிய போதை மீட்பு உதவி எண் 14446 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340577®=3&lang=1
(Release ID : 2340577)
****
SK/PLM/SH