இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் இல்லாத இளைய தலைமுறையை உருவாக்கும் விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம்: 10-வது வாரத்தில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 8:00PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் அமைப்பு, 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்' என்ற 100 வார விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தை நடத்துகிறது. இதன் 10-வது வாரத்தில், நாடு முழுவதும் 36 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 95,147 பேர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 440 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் 322 விளையாட்டுப் போட்டிகள் மூலம் 81,489 பேர் பங்கேற்றனர். 1,053 விளையாட்டு நடவடிக்கைகள் நடைபெற்றன. நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உடல்நலம், குழு ஒற்றுமை, ஒழுக்கம் ஆகியவற்றை வளர்ப்பது இதன் நோக்கமாகும்.

மேலும், 118 இளைஞர் நாடாளுமன்றக் கூட்டங்களில் 13,658 இளைஞர்கள் பங்கேற்றனர். இக்கூட்டங்களில் போதைப்பொருள் பயன்பாட்டின் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள், போதையில்லா சமூகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு வட்டாரத்திலும் குறைந்தது 80 இளைஞர்கள் பங்கேற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மை பாரத் இணையதள அறிமுகம், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட நான்கு அமர்வுகள் நடத்தப்பட்டன. பிரம்மா குமாரிகள், ஹார்ட்ஃபுல்னெஸ் ஆகிய அமைப்புகள் இதற்கு ஆதரவளித்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340575&reg=3&lang=1

(Release ID : 2340575)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340663) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Gujarati , English