சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 7:15PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்று வரும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் (ஐஐடிஎஃப் 2026), சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அரங்கம், நவம்பர் 22, 2026 நிலவரப்படி சுமார் ரூ. 1.16 கோடி மதிப்பிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இது பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள ஊக்கமளிக்கும் வரவேற்பையும், உள்நாட்டுத் தயாரிப்புகள், பாரம்பரியக் கைவினைத்திறன் மீதான வளர்ந்து வரும் பாராட்டுதலையும் வெளிப்படுத்துகிறது.
இந்த அரங்கம், இந்தியாவின் பன்முக கலாச்சார பாரம்பரியம், பாரம்பரியத் திறன்கள், உள்நாட்டு கைவினைத் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இது பார்வையாளர்களுக்கு, உண்மையான கைவினைப் பொருட்களைக் கண்டறியும் வாய்ப்பை வழங்குவதுடன், நேரடியாகப் பொருட்களை வாங்குவதன் மூலம் கைவினைக் கலைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பங்களிக்க உதவுகிறது.
2026 நவம்பர் 27 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 19 மாநிலங்களைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340532®=3&lang=1
****
SK/BR/SH