கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), இந்தியன் பனோரமா பிரிவில் இடம்பெற்றுள்ள வங்காள மொழித் திரைப்படமான ‘பக்லா கோரா’ (Pagla Ghora), இந்தித் திரைப்படமான ‘ஓ மை டாக்’ (Ohh My Dog) ஆகியவை கவனம் பெற்றுள்ளன. இத்திரைப்படங்கள் குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர்கள் சேகர் தாஸ், அமித் ராய், நடிகை கார்கி ராய் சௌத்ரி, தயாரிப்பாளர் டாக்டர் பிரபிர் பௌமிக் ஆகியோர் பங்கேற்றனர்.
பக்லா கோரா: தேசிய திரைப்பட விருது பெற்ற இயக்குநர் சேகர் தாஸ் இயக்கியுள்ள இப்படம், மறைந்த நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரின் புகழ்பெற்ற நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் இறுதிச்சடங்கிற்காக இரவில் காட்டுப் பகுதியில் உள்ள மயானத்தில் கூடும் நான்கு ஆண்களைப் பற்றிய கதை இது. அந்தப் பெண்ணின் ஆவி அவர்களை எதிர்கொள்ளும்போது, அவர்களின் தவறுகள், குற்ற உணர்வுகள் வெளிப்படுகின்றன என்று இயக்குநர் சேகர் தாஸ் கூறினார்.
ஓ மை டாக்: இயக்குநர் அமித் ராய் இயக்கியுள்ள இப்படம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான ஆழமான அன்பைப் பேசுகிறது. அசாமில் 14 வயது அபு தனது காணாமல் போன நாய் மோமோவைத் தேடுகிறான். பீகாரில் ஆஸ்கர் என்ற நாய், தனது 15 வயது உரிமையாளர் பிரின்ஸைத் தேடுகிறது. விலங்குகளின் விசுவாசம் குறித்து இந்தப் படம் பேசுகிறது என்று இயக்குநர் அமித் ராய் குறிப்பிட்டார்.
நடிகை கார்கி ராய் சௌத்ரி, தமது கதாபாத்திரத்தின் உணர்வுகள் குறித்துப் பேசினார். தயாரிப்பாளர் டாக்டர் பிரபிர் பௌமிக், இலக்கியப் படைப்புகளைத் திரைப்படமாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340581®=3&lang=1
(Release ID : 2340581)
****
SK/PLM/SH