சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2026 6:09PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 41 வயதான இவர், சுமார் 15 ஆண்டுகளாக கைகளால் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்து வந்தார். பணியின் போது நச்சுப் பொருட்களின் வெளிப்பாட்டால், அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக நிதிச்சுமையால் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில், இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரச் சூழலுக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு, இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதாரப் பயிற்சியை மேற்கொண்டார். தற்போது, இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். இவரது இந்த பணியானது, அபாயம் விளைவிக்க கூடிய கழிவுகளுடனான நேரடி தொடர்பை குறைத்து, பாதுகாப்பான, கண்ணியமான சூழலில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உதவுகிறது. ராஜாவின் உடல்நலம் மேம்பட்டுள்ளதுடன், வருமானமும் அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340462®=3&lang=1
****
SK/LN/SH