சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் ரத்தசோகை பாதிப்பு குறைந்துள்ளது: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 6:35PM by PIB Chennai

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலான ஐசிஎம்ஆர் நடத்திய சம்படா (SAMPADA) என்ற உணவு ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வில், முந்தைய தேசிய ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ரத்தசோகை பாதிப்பு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலான வயதுப் பிரிவினரிடம் கடுமையான ரத்தசோகை பாதிப்பு 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பே காணப்படுகிறது.

2023 முதல் 2025 வரை நடைபெற்ற இந்த ஆய்வு, 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 183 மாவட்டங்களில், 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் நடத்தப்பட்டது. ஹீமோகுளோபின் அளவைக் கண்டறிய 1.7 லட்சத்துக்கும் அதிகமான ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் பால் கூறுகையில், ரத்தசோகை பாதிப்பு குறைந்திருப்பது ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார். இந்த ஆய்வு, ரத்தசோகையைத் தடுக்கும் 'ரத்தசோகையற்ற பாரதம்' திட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் பாதிப்புக்கு ஏற்ப ரத்தசோகையைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆய்வு உதவும் என ஐசிஎம்ஆர்-என்ஐஎன் இயக்குநர் திருமதி பாரதி குல்கர்னி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2340476&reg=3&lang=1

(Release ID: 2340476)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340579) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu