சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை வடக்கு அஞ்சல் கோட்டம் சார்பில் டிசம்பர் 4-ஆம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 6:44PM by PIB Chennai

சென்னை வடக்கு அஞ்சல் கோட்டம் சார்பில், வரும் டிசம்பர் 4, 2026 அன்று காலை 11 மணிக்கு அஞ்சல் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள சென்னை மாநகர் வடக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும்.

அலுவலக முகவரி:

அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம்,

சென்னை மாநகர் வடக்கு அஞ்சல் கோட்டம்,

எண். 5 (பழைய எண். 3), நான்காவது தளம், எத்திராஜ் சாலை, எழும்பூர்,

சென்னை – 600 008.

இந்தக் கூட்டத்தில், அஞ்சல் துறையின் சேவைகள், திட்டங்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளைக் கூட்டத்தின் தலைவர் நேரடியாகக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பார்.

குறைகளைத் தெரிவிக்க கடைசி நாள்: டிசம்பர் 1, 2026.

பொதுமக்கள் தங்களது புகார்களை 2026 டிசம்பர் 1 அன்றோ அதற்கு முன்போ சமர்ப்பிக்க வேண்டும்.

அஞ்சல் சேவைகள் தொடர்பான புகார்களில் இடம்பெற வேண்டிய விவரங்கள்:

பணவிடை (Money Order - MO), பெறுமதித் தொகை செலுத்தும் அஞ்சல் (Value Payable - VP), பதிவு அஞ்சல், காப்பீடு செய்யப்பட்ட அஞ்சல், விரைவு அஞ்சல் (Speed Post) ஆகியவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால், புகாரில் பின்வரும் விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

அஞ்சல் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்புநரின் முழு முகவரி, அஞ்சலைப் பெறுபவரின் முழு முகவரி, பதிவு செய்ததற்கான ரசீது எண், அஞ்சல் பதிவு செய்யப்பட்ட தேதி, அஞ்சல் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தின் பெயர்.

சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் காப்பீடு தொடர்பான புகார்கள்:

அஞ்சல் சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு ஆகியவை தொடர்பான புகார்களில் பின்வரும் விவரங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

கணக்கு எண் அல்லது காப்பீட்டுக் கொள்கை எண், பணம் செலுத்தியவர் அல்லது காப்பீடு செய்தவரின் பெயர், அவருடைய முழு முகவரி, சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர், புகாருக்குத் தொடர்புடைய துறை சார்ந்த ஆவணங்கள் அல்லது குறிப்புகள்.

புகார்களை அனுப்ப வேண்டிய முகவரி:

முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்,

சென்னை மாநகர் வடக்கு அஞ்சல் கோட்டம்,

எழும்பூர், சென்னை – 600 008.

புகார்களைச் சாதாரண அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

அஞ்சல் உறையின் மீது 'கோட்ட அஞ்சல் குறைதீர்ப்பு - சென்னை நகர வடக்கு கோட்டம்' (Division Dak Adalat - Chennai City North Division) என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

மின்னஞ்சல் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரி:

dochennainorth@indiapost.gov.in

தனியார் கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

 

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340563) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English