பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வியட்நாமின் டா நாங் துறைமுகப் பயணத்தை நிறைவு செய்த ஐஎன்எஸ் சயாத்ரி

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 4:56PM by PIB Chennai

தொலைதூரக் கிழக்குப் பகுதிக்கான பயணத்தின் ஒரு பகுதியாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படையின் வழிகாட்டும் ஏவுகணை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சயாத்ரி, 2026 நவம்பர் 20 முதல் 22 வரை வியட்நாமின் டா நாங் துறைமுகத்திற்கு மேற்கொண்ட தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும் தொழில்முறை, கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வியட்நாம் கடற்படையின் மூத்த தலைவர்களுடனான சந்திப்புகள், இரு நாட்டு கடற்படை வீரர்களின் பரஸ்பர கப்பல் பார்வையிடல், கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த நிகழ்வுகள் இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான தொழில்முறை உறவுகள், பரஸ்பர நம்பிக்கை, நட்புறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தின.

இந்தியா-வியட்நாம் கடல்சார் கூட்டாண்மையானது, இரு கடற்படைகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஈடுபாட்டையும், கடல்சார் ஒத்துழைப்பிற்கான அவற்றின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை, பிராந்தியப் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர, முழுமையான முன்னேற்றம் ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நட்பு நாடுகளின் கடற்படைகளுடன் கடல்சார் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்திய கடற்படை மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை ஐஎன்எஸ் சயாத்ரியின் இந்தப் பயணம் எடுத்துக்காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340385&reg=3&lang=1

****

SK/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340544) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी