பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – நேபாளம் இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியும் நேபாள பிரதமர் திரு பாலேந்திர ஷாவும் விவாதித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 4:54PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் நேபாள பிரதமர் திரு பாலேந்திர ஷா 2026 நவம்பர் 22, 23 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். புதுதில்லியில் நடைபெற்ற இரண்டு பிரதமர்களின் சந்திப்பு சுமூகமான, ஆக்கப்பூர்வமான, தொலைநோக்குப் பார்வையுடனான பேச்சுவார்த்தைகளாக அமைந்தது. அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்தியா – நேபாளம் இடையே நீண்டகால, நாகரீக ரீதியிலான உறவுகள், பரஸ்பர மரியாதை, நன்மைகளின் அடிப்படையில் அமைந்துள்ளதுடன், மக்களுக்கிடையே வலுவான தொடர்புகள் மூலம் வலிமைபெற்று பன்முகத்தன்மை கொண்ட நட்புறவாக வளர்ச்சியடைந்துள்ளதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

2026 ஆகஸ்ட் மாதம் ரசுவா – திரிசூலி படுகையிலும், இதர பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளின்போது இந்தியா அளித்த உடனடி மனிதாபிமான உதவிகள், தேடுதல், மீட்புப் பணிகளுக்காக நேபாளம் தமது நன்றியை தெரிவித்தது. நேபாள நாட்டின் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து ஆலோசிப்பது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இருதரப்பு நட்புறவானது தற்போதைய அரசியல் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும், அது புதுப்பிக்கப்பட்ட, தொலைநோக்குப் பார்வையுடனான சட்டரீதியிலான கட்டமைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் 1950-ம் ஆண்டின் அமைதி மற்றும் நட்புறவு ஒப்பந்தம் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள இருதரப்பு ஒப்பந்தங்களை பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்ய முடியும். நீர்வளங்கள், எரிசக்தி, வர்த்தகம், எல்லை குறித்த விவகாரங்கள் உட்பட தீர்வு காணப்படாத அனைத்து விவகாரங்களும் பரஸ்பர உரையாடல், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட உள்ளது.

இந்தியா -  நேபாளம் இடையேயான நட்புறவை இருநாட்டு மக்களுக்கும் பயன்களை அளிக்கக்கூடிய நவீன, பயன்சார்ந்த நட்புறவாக மாற்றுவதற்கு இரு தலைவர்களும் இந்த கூட்டுத் தொலைநோக்குப் பார்வையை ஏற்றுக்கொண்டனர். இது இந்தியா, நேபாள நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் விருப்பங்களை மையமாகக் கொண்டதாகும். அத்துடன் பத்து அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இருதரப்பு கூட்டாண்மையின் எதிர்காலத்திற்கான வழிவகையை இது அளிக்கும்.

விரிவான பொருளாதார மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மை

இந்தியாவின் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையும், நேபாளத்தின் வளமான நேபாளம் என்ற விருப்பமும் பல்வேறு பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளது. அவற்றை முறையாக பயன்படுத்துவதால் இரு நாடுகளுக்கிடையே விரிவான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும்.

இவை பின்வருவனவற்றை உள்ளடக்கியதாகும்.

இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான நடைமுறை ஒப்பந்தங்களை ஆய்வுசெய்து அதனால் மேலும் விரிவான பொருளாதார கூட்டாண்மையை எளிதாக்குவது.

மேம்படுத்தப்பட்ட அணுகலை உறுதிசெய்யவும், போக்குவரத்தை வலுப்படுத்தவும், புதிய போக்குவரத்து வழித்தடங்களையும், வான்வழிப் பாதைகளையும் உருவாக்குதல்.

இந்தியா – நேபாளம் எல்லை அருகே ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பூங்காக்கள் அமைப்பதற்கான ஒத்துழைப்பு.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340383&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2340506) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Gujarati