சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடியில் புதிய சுகாதார, ஆராய்ச்சி வசதிகளை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 2:43PM by PIB Chennai

சென்னை ஐஐடியில் ஆட்டிசம் ஆய்வகம், மின்சார ஆம்புலன்ஸ் சேவை, தூக்கம் குறித்த ஆராய்ச்சிக்கான பிரத்யேக மையம் ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா 2026 நவம்பர் 22 அன்று தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி-ன் நிறுவன நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதிகள், வளாகங்களில் சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதுடன், உள்நாட்டு மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஊக்குவிக்கின்றன.

மனநலம், தூக்கம் குறித்த ஆராய்ச்சி, அவசர சிகிச்சை ஆகியவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பாராட்டிய திருமதி புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா, இம்முயற்சிகள் சமூகத்திற்குக் குறைந்த செலவிலான, ஆதாரப்பூர்வமான தீர்வுகளை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பாரம்பரிய இந்திய மருத்துவ அறிவையும், பொறியியல் ஆராய்ச்சியையும் இவை ஒருங்கிணைப்பதாக சென்னை ஐஐடி-ன் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி குறிப்பிட்டார்.

சென்னை காவேரி மருத்துவமனையுடன் இணைந்து சென்னை வளாகத்தின் சுகாதார மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தூக்கம் குறித்த ஆராய்ச்சி மையம், சிறப்புப் பரிசோதனைகளுடன் உள்நாட்டிலேயே தூக்கக் கண்காணிப்பு சென்சார் உருவாக்கத்திற்கும் துணைபுரியும். இந்திய மருத்துவ அறிவு மையத்தின் கீழ் செயல்படும் ஆட்டிசம் ஆய்வகம், ஜோத்பூர் எய்ம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சிகிச்சையை உள்நாட்டில் தயாரிக்கப்படும் கையுறைகள் மூலம் அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்யும். மேலும், இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார ஆம்புலன்ஸ் சேவை சென்னை வளாகத்தின் அவசரகாலச் சேவைகளை வலுப்படுத்தும்.

***

SS/PD/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2340435) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English