ஆயுஷ்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026-ல் இடம்பெற்றுள்ள ஆயுஷ் அரங்கு பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2026 12:12PM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நவம்பர் 13 முதல் 27 வரை நடைபெறும் 45-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் 2-வது அரங்கில் இந்தியாவின் பன்முகத் தன்மைமிக்க, பாரம்பரிய சுகாதார நலன் முறைகளை ஆயுஷ் அமைச்சகம் காட்சிப்படுத்தி உள்ளது.

ஆயுஷ் அரங்கில் சுகாதார நலன் குறித்த ஆலோசனைகள், உரையாடல்கள், பாரம்பரிய உணவுத் தயாரிப்பு முறைகள், மருத்துவத் தாவரங்களின் காட்சிகள், கல்வி சார்ந்த விளக்கக் காட்சிகள் வாயிலாக பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவம் ஏற்படுகிறது.

அவை நோய்த்தடுப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஆயுஷ் முறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. அந்த அரங்கில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள், ஆராய்ச்சிக் குழுமங்கள் ஆகியவை அன்றாட சுகாதார நடைமுறைகளுடன் பாரம்பரிய முறையை இணைக்கும் பல்வேறு நடவடிக்கைகளை விளக்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340242&reg=3&lang=1

***

SS/IR/LDN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2340282) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी