57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

பிரிக்ஸ் நாடுகளிடையே திரைப்படக் கூட்டுத் தயாரிப்புக்கு புதிய வாய்ப்புகள்: சர்வதேச திரைப்பட விழாவில் ஆலோசனை

இடுகை இடப்பட்ட நாள்: 22 NOV 2026 7:11PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2340067Views: 5
Read in:

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பிரிக்ஸ் திரைப்பட விழா பிரிவையொட்டி நடைபெற்ற வட்டமேசைக் கூட்டத்தில், உறுப்பு நாடுகளிடையே திரைப்படக் கூட்டுத் தயாரிப்பு, விநியோகம், தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ரஷ்யா, நைஜீரியா, இந்தோனேசியா, ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலர் திரு பிரபாத், பிரிக்ஸ் நாடுகளிடையே நீடித்த ஒத்துழைப்பை உருவாக்க இந்தியா உறுதியாக இருப்பதாகக் கூறினார். திரைப்படக் கூட்டுத் தயாரிப்பை அதிகரிப்பதுடன், தொலைக்காட்சி, ஓடிடி தளங்கள் ஆகியவை வழியாகப் படங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திரைப்படங்கள் ஒரு நாட்டின் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள உதவுவதாக வெளியுறவு அமைச்சக இணைச் செயலர் திரு ஷம்பு எல். ஹக்கி தெரிவித்தார். பிரிக்ஸ் வேவ்ஸ் பஜார் திரைப்படத் துறையினரிடையே புதிய இணைப்புகளை உருவாக்கியுள்ளதாக தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஜி. கிருஷ்ணகுமார் குறிப்பிட்டார்.

நைஜீரியத் தூதர் திரு சைது தாஹிரு முகமது, கூட்டுத் தயாரிப்பு, திரைப்பட விநியோகம், தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவை இளைஞர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

இந்தோனேசியத் தூதரக அதிகாரி திருமதி எர்னி வஹ்யூனி, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் மூலம் இந்தியா, இந்தோனேசியா இடையே நீண்டகால கலாசாரத் தொடர்பு இருப்பதாகக் கூறினார். திரைப்பட விநியோகம், அனிமேஷன், விளையாட்டுத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைக்க இந்தோனேசியா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலாசாரப் பரிமாற்றத்தை வலுப்படுத்த திரைப்படங்கள் உதவும் என்று தெரிவித்தனர். பிரிக்ஸ் நாடுகளின் திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் குறும்படக் காட்சியுடன் கூட்டம் நிறைவடைந்தது.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340021&reg=3&lang=1

****

SK/PLM/RJ


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340067
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026