இடுகை இடப்பட்ட நாள்:
22 NOV 2026 12:43PM by PIB Chennai
மாநிலங்களவை உறுப்பினர் ராம்ராவ் வட்குடே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பும், ஏழைகள், நலிவடைந்த மக்களுக்குச் சேவையாற்றுவதில் அவர் காட்டிய அக்கறையும் எப்போதும் நினைவுகூரப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மாநிலங்களவை உறுப்பினர் திரு ராம்ராவ் வட்குடே மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும், ஏழைகள், நலிவடைந்த மக்களுக்குச் சேவையாற்றுவதில் அவர் காட்டிய அக்கறைக்காகவும் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். மகாராஷ்டிராவில் பிஜேபி-யை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. அவரது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி."
****
(Release ID : 2339876)
SK/PLM/RJ