இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2026 3:11PM by PIB Chennai
உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்களின் தலைமைத்துவம், அனுபவம், புதுமையான சிந்தனை ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனஸ்தலி வித்யாபீடத்தில் பிரிக்ஸ் பெண் தலைவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
உலக அமைதி, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் மருத்துவம், கல்வி, விவசாயம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் மனிதநேயத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், இணையக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை எதிர்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பு எந்த நாட்டுக்கும் சவாலானது அல்ல எனவும் அனைத்து நாடுகளின் பொதுவான வளர்ச்சியும் நலனுமே அதன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
சுயஉதவிக் குழுக்கள், லட்சாதிபதி சகோதரி திட்டம், ட்ரோன் சகோதரி திட்டம் போன்றவை மூலம் பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவு பெறுவதாக அவர் குறிப்பிட்டார். பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், பெண்கள் மேம்பாடு என்பதைத் தாண்டி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இன்று (2026 நவம்பர் 21) முதல் 23 வரை 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பெண்களின் தலைமைத்துவம், அரசியல் பங்கேற்பு, டிஜிட்டல் பாதுகாப்பு ஆகியவை மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்களாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339506®=3&lang=1
(Release ID : 2339506)
****
TV/PLM/SH