சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புற்றுநோய் விழிப்புணர்வு காணொலியை சுகாதாரத் துறைச் செயலாளர் வெளியிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 NOV 2026 2:50PM by PIB Chennai

மத்திய சுகாதாரத் துறைச் செயலர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, மும்பையில் நடைபெற்ற தேசிய புற்றுநோய் மையங்களின் கூட்டமைப்பின் (என்சிஜி - NCG) 2026-ம் ஆண்டு கூட்டத்தில், ‘என்சிஜி விஷ்வாஸ்’ என்ற புதிய விழிப்புணர்வுக் காணொலியை வெளியிட்டார்.

ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலம் புதிய விழிப்புணர்வுக் காணொலிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து குறைந்த செலவில் தரமான சிகிச்சை வழங்க அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இதில், மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய்ப் புற்றுநோய், வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் காணொலிகள் இடம்பெற்றுள்ளன. இவை இந்தி, மராத்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் உள்ளன. நோய்த் தடுப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை, தொடர் பராமரிப்பு குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 1.87 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் இதுவரை 153 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வாய் புற்றுநோய்க்கு 37.1 கோடி, மார்பகப் புற்றுநோய்க்கு 17.4 கோடி, கருப்பைவாய்ப் புற்றுநோய்க்கு 9.7 கோடி பரிசோதனைகள் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2339488&reg=3&lang=1

(Release ID : 2339488)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339520) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English