இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 5:00PM by PIB Chennai
2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்படும் முக்கிய தொழில்துறைகளின் குறியீட்டு எண், 2025 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2026 அக்டோபரில் 10.9% தற்காலிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது 2026 செப்டம்பர் மாத இறுதி குறியீட்டு எண்ணில் பதிவான 8.2% வளர்ச்சியை விட அதிகமாகும்.
2026 அக்டோபரில் இரும்புத் தாது 26.4%, நிலக்கரி 23.1%, மின்சாரம் 21.6%, சிமெண்ட் 15.4%, எஃகு 7.3%, சுத்திகரிப்புப் பொருட்கள் 3.4% என்ற வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதே சமயம் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், உரங்கள் ஆகிய துறைகள் எதிர்மறை வளர்ச்சியைச் சந்தித்துள்ளன. சமீபத்திய மாதங்களில் முக்கிய தொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இரும்புத் தாது, மின்சாரம், சிமெண்ட், நிலக்கரி, எஃகு ஆகிய துறைகள் முக்கிய உந்துசக்தியாகத் திகழ்கின்றன.
2026 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் முக்கிய தொழில் துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 6% ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 2.3% ஆக இருந்தது. செப்டம்பர் 2026-ம் மாத வளர்ச்சிக்கான இறுதிக் குறியீட்டு எண் 118.3-லிருந்து 118.6 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், வளர்ச்சி விகிதமும் 7.9%-லிருந்து 8.2% ஆக உயர்ந்துள்ளது. நவம்பர் 2026-ம் மாதத்திற்கான முக்கிய தொழில்துறைகளின் குறியீட்டு எண் 2026 டிசம்பர் 21 அன்று வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339126®=3&lang=1
***
TV/PD/SH