சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சித்த மருத்துவர்களுக்கான மூன்று நாள் திறன் பயிற்சி நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 7:24PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (CCRS), சித்த மருத்துவர்களுக்கு நூல் தயாரிப்பு குறித்த திறன் மேம்பாட்டுப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. நவம்பர் 18 அன்று தொடங்கிய இந்த பயிலரங்கு 20 நவம்பர் 2026 அன்று நிறைவடைந்தது.

இதில், சித்த மருத்துவப் பணியாளர்களின் வெளியீடு மற்றும் வடிவமைப்பு சார்ந்த திறன்களை மேம்படுத்துவதோடு, சித்த மருத்துவ அறிவைத் தரமான வெளியீடுகள் வாயிலாக ஆவணப்படுத்தவும், வடிவமைக்கவும், பரவலாகக் கொண்டு செல்லவும் அவர்களின் திறனை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

இப்பயிலரங்கில், புத்தகங்கள் மற்றும் பிற வெளியீடுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான வரைகலை வடிவமைப்பு (கிராஃபிக்ஸ்) மற்றும் கணினி வழி பக்க வடிவமைப்புப் பயன்பாடுகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிலரங்கின் நிறைவு விழாவில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் முத்துக்குமார், ஆராய்ச்சி அலுவலர் செல்வராஜன் மற்றும் வரைவு மற்றும் பட்டுவாடா அலுவலர் மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய முத்துக்குமார், சித்த மருத்துவத் துறையில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் ஒரு முன்னோடி அடையாள நிறுவனமாக உருவெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சித்த மருத்துவ நூல்களை முறையாக ஆவணப்படுத்துவதுடன், அவற்றைப் பெருமளவிலான நூல்களாக வெளியிடுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இதன் மூலம் சித்த மருத்துவத்தின் வளமான அறிவுச் செல்வத்தைப் பாதுகாத்து, பரவலாகப் பகிர்ந்து, சமூகத்தின் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார்.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339271) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English