இடுகை இடப்பட்ட நாள்:
20 NOV 2026 6:59PM by PIB Chennai

அணுசக்தித் துறையின் (DAE) கொள்முதல் மற்றும் சேமிப்பு இயக்குநரகத்தின் (DPS) கீழ் செயல்படும் சென்னை மண்டல கொள்முதல் பிரிவு (MRPU), அரசு மின்னணுச் சந்தையில் (GeM) விற்பனையாளர்களின் பதிவு, சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விற்பனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், நவம்பர் 20 அன்று சென்னை, பல்லாவரத்தில் 'விற்பனையாளர்-வாங்குபவர் சந்திப்பு 2026' ஒன்றை ஏற்பாடு செய்தது. பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 53 விற்பனையாளர்களின் பங்கேற்புடன், உள்ளூர் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடந்தது.
சென்னை மண்டல கொள்முதல் பிரிவின் துணை இயக்குநர் திரு ஐ.ஆர்.கே. தீக்ஷிதுலு வரவேற்புரையைத் தொடர்ந்து, அதன் மண்டல இயக்குநர் கித்தேரி ஜோசப் கொள்முதல் பிரிவின் சாதனைகள் மற்றும் உறுப்பினர்கள் ஆற்றிய நீண்டகால அர்ப்பணிப்புகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் திரு. ஸ்ரீகுமார் ஜி பிள்ளை தனது தொடக்க உரையில், 'மேக் இன் இந்தியா', ' தற்சார்பு இந்தியா’, 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' போன்ற தேசிய முன்னெடுப்புகளுடன் இந்தத் திட்டம் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும், தர அமைப்புகள், திறன் மேம்பாடு மற்றும் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு விற்பனையாளர்களை அவர் வலியுறுத்தினார்.
கொள்முதல் பிரிவின் இயக்குநர் திரு விமல் குமார் பேசுகையில், விநியோகப்பிணைப்பை வலுப்படுத்துவதில் உள்நாட்டு விநியோகஸ்தர்களின் முக்கியப் பங்கை அவர் வலியுறுத்தினார். இறக்குமதிச் சார்பைக் குறைப்பது மற்றும் கடுமையான ஒழுங்குமுறை இணக்கத்தைப் பேணுவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். வெளிப்படையான மற்றும் திறமையான பொதுக் கொள்முதலுக்கான துறையின் உறுதிப்பாட்டுடன், இந்தியாவின் அணுசக்தித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் குறு மற்றும் சிறு நிறுவனங்களின் (MSMEs) பங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அரசு மின்-சந்தை (GeM) அதிகாரி, GeM-இல் பதிவு செய்தல், அதன் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் ஆகியவற்றை விற்பனையாளர்களுக்கு விளக்கினார்.
கொள்முதல் அதிகாரி திரு ஜி ராமு மற்றும் உதவி கொள்முதல் அதிகாரி திரு சைலேஷ் எஸ் பட் ஆகியோரின் சிறப்பு உரையில், ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள், சமர்ப்பிக்கப்பட்ட டெண்டர்கள் ஒரே ஐபி முகவரி மற்றும் இணைப்பு XI படிவத்தை சரியாக நிரப்பாததன் காரணமாக நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSME) நன்மைகள், விற்பனையாளர் மதிப்பீட்டு விதிமுறைகள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன.

****
TV/SH