சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் அவசர கால தயார் நிலை ஒத்திகை

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 6:51PM by PIB Chennai

இந்திய அணு சக்தி கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் ஆகியவற்றில் அவசர கால தயார் நிலை ஒத்திகை இன்று (20 நவம்பர்) நடத்தப்பட்டது.

பல பாதுகாப்பு அடுக்குகள் உடைய சென்னை அணுமின் நிலைய அணு உலையில் இம்மாதிரியான விபத்து நடக்க சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்றாலும், நிலையத்தின் அவசர நிலை தயார்நிலை செயல்பாட்டை சோதிக்கும் வண்ணமாக இருப்பதே இத்தகைய ஒத்திகைகளின் முக்கிய நோக்கமாகும்.

கல்பாக்கம் வளாக அவசர நிலை நிர்வாகக் குழுவின் இயக்குனராக செயல்படும் சென்னை அணுமின் நிலைய இயக்குனர் திரு. செல்வகுமரன் தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.  நிலைய ஊழியர்களை பாதுகாப்பான கட்டிடங்களில் இருக்க செய்தல், காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை தரும் ஒத்திகை, கதிர்வீச்சு மாசுபட்ட வண்டியை சுத்தம் செய்யும் ஒத்திகை ஆகியவை நடைபெற்றது. 7100 பேர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். இந்த ஒத்திகை கல்பாக்கம் அணுசக்தி மையத்தின் தயார் நிலை மற்றும் திறனை நிரூபணம் செய்யும் வகையிலும், அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவர தயார் நிலை குறிப்பிட்டபடி நடத்துவதை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. மேலும் இந்த ஒத்திகை, அணு சக்தி துறையின் அணுமின் நிலையங்களின் அவசரநிலை மேலாண்மை, மற்றும் அவசர நிலையை சமாளிக்கும் திறனையும் உறுதிபடுத்தியுள்ளது.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2339242) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English