சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 NOV 2026 12:07PM by PIB Chennai

அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலத்தின் சார்பில் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான மண்டல அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் 03.12.2026 அன்று காலை 11.30 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள, அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தின் 3-ஆம் தளத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்திற்கு சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் தலைமை வகித்து, ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிய உள்ளார்.

தங்களது குறைகளை இக்கூட்டத்தில் சமர்ப்பிக்க விரும்பும் ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள், தங்களது மனுக்களை 23.11.2026 அல்லது அதற்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மனுக்களைச் சமர்ப்பிக்கும்போது பின்வரும் அறிவுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது:

  1. பிறரது மின்னஞ்சல் மூலம் குறை மனு அனுப்பப்படும் பட்சத்தில் மனுதாரரின் கையொப்பமிட்ட மனுவை ஸ்கேன் செய்து அனுப்பிய நகல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  2. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் 25.03.2011 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணை எண். 44013/2/2010-Coord இன் பத்தி 6.3-ன்படி, ஓய்வூதியர் சங்கங்கள் மூலம் தனிப்பட்ட ஓய்வூதியர்களின் குறை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அவை இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட மாட்டாது. மேலும், தனிப்பட்ட ஓய்வூதியர்களின் சார்பாக அவர்களது குறைகளை எடுத்துரைக்க சங்கப் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
  3. ஓய்வூதியர் சங்கப் பிரதிநிதிகள் மூலம் குறை மனுக்களைச் சமர்ப்பிக்கும் தனிப்பட்ட ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள், சங்கத்தின் அதிகாரப்பூர்வ பதவி அல்லது பொறுப்பின் அடிப்படையில் அத்தகைய பிரதிநிதிகள் மூலம் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவோ அல்லது பங்கேற்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட பிரதிநிதியின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மட்டுமே குறிப்பிடப்பட வேண்டும். சங்கத்தில் அவர் வகிக்கும் பதவி குறிப்பிடப்படக் கூடாது.
  4. கொள்கை சார்ந்த விவகாரங்கள் மற்றும் சட்டம் தொடர்பான அம்சங்களைக் கொண்ட குறை மனுக்கள் இக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

குறை மனுக்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்:

மூத்த கணக்கு அலுவலர்,

அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம்,

சென்னை நகர மண்டலம்-600 002.

அஞ்சல் மூலம் அனுப்பப்படும் உறையின் மீது "Regional Pension Adalat" எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும், குறை மனுக்களை மின்னஞ்சல் accts.chennaicity@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.

***

TV/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2338913) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English