57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

உலகளாவிய திரைப்பட ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பதில் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'வேவ்ஸ் ஃபிலிம் பஜார்'

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 8:22PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2338817Views: 5

2007-ல் 18 நாடுகளிலிருந்து 204 பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு சிறிய கூட்டமாகத் தொடங்கி, 2025-ல் 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2,500-க்கும் அதிகமான பிரதிநிதிகளை வரவேற்கும் ஒரு பெரிய சர்வதேச சந்தையாக ஃபிலிம் பஜார் உருவெடுத்துள்ளது. இது இந்திய திரைப்படங்களை உலகளாவிய திரைப்படத் துறையுடன் இணைக்கும் ஒரு முக்கிய தளமாகத் திகழ்கிறது.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால், இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படும் 'வேவ்ஸ் ஃபிலிம் பஜார்' , உலக ஒலி, ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) முன்முயற்சியின் ஒரு அங்கமாகும். 'இந்தியாவில் உருவாக்குதல், உலகிற்காக உருவாக்குதல்'  என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், கூட்டுத் தயாரிப்பு, நிதி உதவி, விநியோகம், சர்வதேசக் கூட்டணிகள் வாயிலாக இந்தியாவின் படைப்பாற்றல் திறனை உலகளாவிய வாய்ப்புகளாக மாற்றுவதை இந்தத் தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வேவ்ஸ் ஃபிலிம் பஜார்-ன் 20-வது பதிப்பு, 2026 நவம்பர் 20 அன்று கோவாவில் தொடங்கி வைக்கப்படும். இதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார்,  கூடுதல் செயலாளர் திரு பிரபாத் குமார், திரைப்பட விழாவின் இயக்குநர் திரு அசுதோஷ் கோவாரிகர், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஜி. கிருஷ்ணகுமார், நிர்வாக இயக்குநர் திரு தீரஜ் சிங் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338757®=3&lang=1

****

TV/BR/SH


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2338817
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026