PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 44% அதிகரிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 19 NOV 2026 3:01PM by PIB Chennai

2026-27 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி 44% அதிகரித்து 31.97 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 22.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இதில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 35.8% வளர்ச்சியுடன் 18.17 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதே சமயம், ஸ்மார்ட்போன் அல்லாத மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 56.5% என்ற வளர்ச்சியடைந்து 8.81 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 13.79 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த ஏற்றுமதியில் ஸ்மார்ட்போன் அல்லாத மின்னணுப் பொருட்களின் பங்கு 39.7 சதவீதத்திலிருந்து 43.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஸ்மார்ட்போன் அல்லாத மின்னணுப் பொருட்கள் பிரிவில் ஐந்து முக்கிய தயாரிப்புகளின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பாகங்கள், துணைக்கருவிகள் பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட மின்சுற்று பலகைகளின் ஏற்றுமதி 63.3 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2.10 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து 3,219% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தப் பொருட்களுக்கு சிங்கப்பூர் 1.87 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதன்மை சந்தையாகவும், சீனா 111.5 மில்லியன் அமெரிக்க டாலருடன் அடுத்த இடத்திலும் உள்ளன. முழுமையாகப் பொருத்தப்பட்ட அச்சிடப்பட்ட மின்சுற்று பலகைகளின் ஏற்றுமதி 304% அதிகரித்து 864.1 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு சீனா 789.2 மில்லியன் அமெரிக்க டாலர் இறக்குமதியுடன் முக்கிய சந்தையாகத் திகழ்கிறது.

நெட்வொர்க் பரிமாற்றம், வழித்தட உபகரணங்களின் ஏற்றுமதி 732.9 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 98% உயர்ந்து 1.45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதில் ஹாங்காங் 857.7 மில்லியன் அமெரிக்க டாலருடன் முன்னணியில் உள்ள நிலையில், அமெரிக்கா 130.9 மில்லியன் அமெரிக்க டாலர், நெதர்லாந்து 124.4 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளன. நினைவகத்துடன் (மெமரி) ஒருங்கிணைந்த சுற்றுகளின் ஏற்றுமதி 23.1 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2,333% அதிகரித்து 562.4 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் மலேசியா 390.8 மில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்திலும், சிங்கப்பூர் 102.4 மில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

மேலும், திட நிலை சேமிப்பு சாதனங்களின் ஏற்றுமதி 14.6 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1,680% உயர்ந்து 260.5 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதில் சீனா 108.6 மில்லியன் அமெரிக்க டாலருடனும், சிங்கப்பூர் 76.8 மில்லியன் அமெரிக்க டாலருடனும் முக்கிய சந்தைகளாக உள்ளன. மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் ஸ்மார்ட்போன்களின் பங்கு 13.38 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 18.17 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து வலுவான அடித்தளமாக தொடர்ந்து இருந்து வருகிறது. சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், மலேசியா ஆகிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்த விரிவாக்கம், உலகளாவிய மின்னணு வர்த்தகத்தில் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், வலுவான நிலையையும் எடுத்துக்காட்டுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338408&reg=3&lang=1&_gl=1

***

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2338720) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati